இனி ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் டெலிவரி உண்டு? தமிழக அரசின் பதில் என்ன?

0
258
Do you have cylinder delivery on Sunday anymore? What is the response of the Tamil Nadu government?
Do you have cylinder delivery on Sunday anymore? What is the response of the Tamil Nadu government?

இனி ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் டெலிவரி உண்டு? தமிழக அரசின் பதில் என்ன?

நம் அனைவரும் வீட்டிலும் சிலிண்டர் இணைப்பு இருக்கும். அரசு தரப்பிலும் சிலிண்டருக்கு மானியம்,இலவச சிலிண்டர் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.தமிழகத்தில் பண்டிகை காலங்களால் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு தேவை அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டெலிவரி செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழகத்தில், 2.37 கோடி மேற்ப்பட்ட வீடுகளில் சமையல் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.சிலிண்டர் வேண்டி பதிவு செய்த இரண்டு, மூன்று நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், சிலிண்டர் டெலிவரி செய்யப்படுவதில்லை. நேற்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

இதைதொடர்ந்து விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, விஜயதசமி, ஆயுதபூஜை, தீபாவளி என, ஹிந்து பண்டிகைகள் வர உள்ளன. இதனால், வீடுகளில் சமையல் கேஸ் பயன்பாடு அதிகம் இருக்கும்.மேலும், பண்டிகை நாட்களில் சிலிண்டர் டெலிவரியும் செய்வதில்லை. எனவே, ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிலிண்டர் டெலிவரி செய்யுமாறு, எண்ணெய் நிறுவனங்களுக்கு, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleபள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு!
Next articleகார் மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் பலி மூவர் தீவிர சிகிச்சை !