சர்க்கரை நோய் உங்களுக்கு இருக்கின்றதா? அப்போ இந்த பழங்களை நீங்கள் சாப்பிடக்கூடாது! 

Photo of author

By Sakthi

சர்க்கரை நோய் உங்களுக்கு இருக்கின்றதா? அப்போ இந்த பழங்களை நீங்கள் சாப்பிடக்கூடாது!
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை சாப்பிடுவதையும் சர்க்கரை சார்ந்த பொருட்களை சாப்பிடுவதையும் நிறுத்த வேண்டும். சர்க்கரை சார்ந்த பொருட்களை சாப்பிடுவதால் அவர்களுடைய இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே சர்க்கரை சார்ந்த எந்தவொரு பொருளையும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாது.
அது போலவே இயற்கையாகவே சர்க்கரை அதிகமாக இருக்கும் பழங்களையும் சாப்பிடக் கூடாது. என்னதான் பழங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருந்தாலும் சர்க்கரை அதிகமாக இருக்கும் பழங்களை சாப்பிடக்கூடாது. பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உலர் பழங்கள் உடலுக்கு நன்மை கொடுக்கும் என்றாலும் அதில் இயற்கையாகவே சர்க்கரை சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உலர் பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாது. இந்த பதிவில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாத இயற்கையாக சர்க்கரை சத்துக்கள் அதிகமாக இருக்கும் சில உலர் பழங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாத உலர் பழங்கள்…
உலர் பேரீச்சை…
உலர்ந்த பேரீச்சம் பழத்தில் ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் இதில் இயற்கையாகவே சர்க்கரை சத்துக்கள் இருக்கின்றது. இதை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் பொழுது இரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்யும்.
உலர்ந்த திராட்சை…
உலர்ந்த திராட்சை பல வகையான நோய்களை குணமாக்கும். ஆனாலும் சர்க்கரை நோயாளிகள் இந்த உலர்ந்த திராட்சையை சாப்பிடக்கூடாது. உலர்ந்த திராட்சையில் இயற்கையான சர்க்கரை சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது.
உலர் மாம்பழம்…
உலர்ந்த மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரை சத்துக்கள் இருக்கின்றது. அதே போல கார்போஹைட்ரேட் சத்துக்களும் அதிகளவில் இருக்கின்றது. எனவே இந்த பழத்தையும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
உலர் அத்தி பழம்…
உலர்ந்த அத்திப் பழத்தில் இயற்கையான சர்க்கரை சத்துக்கள் இருக்கின்றது. சர்க்கரை நோய் இருப்பவர்களாக இருந்தால் உலர்ந்த அத்திப் பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதை சாப்பிடாமல் இருந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.
உலர் அன்னாசி பழம்…
உலர் அன்னாசி பழத்தில் இயற்கையான சர்க்கரை அதிகளவில் இருக்கின்றது. மேலும் கார்போஹைட்ரேட் சத்தும் இருப்பதால் இதை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கும்.