அடிக்கடி வயிற்று வலி ஏற்படுகின்றதா? அப்போ வெந்தயத்தை இப்படி  பயன்படுத்துங்க! 

Photo of author

By Sakthi

அடிக்கடி வயிற்று வலி ஏற்படுகின்றதா? அப்போ வெந்தயத்தை இப்படி  பயன்படுத்துங்க!
நம்மில் பலருக்கும் குறிப்பாக பெண்களுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். சாதாரணமாக வயிறு வலி ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றது. வயிற்றில் புண் இருந்தாலோ அல்லது சூடு காரணமாகவோ அல்லது தேவையற்ற பொருட்களை சாப்பிட்டாலோ வயிற்று வலி ஏற்படும்.
இந்த வயிற்று வலியில் இருந்து விடுபட பலரும் மாத்திரைகளை விரும்புவார்கள். இயற்கை வைத்திய முறைகளை ஒருசிலர் மட்டுமே விரும்புவார்கள். மாத்திரைகளை விட இயற்கையான மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களில் பல சத்துக்கள் உள்ளது. மேலும் அவை பல வகையான நோய்களையும் நீக்கும். அந்த வகையில் வயிற்று வலியை குணப்படுத்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* வெந்தயம்
* நெய்
* மோர்
செய்முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் கடாய் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர். அந்த கடாயில் நெய் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் வெந்தயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து வெந்தயத்தை நெய்யில் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். வெந்தயம் நன்றாக வறுபட்டதும் இதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து நெய்யில் வறுத்த வெந்தயப் பொடியை மோரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த மோரை குடித்து வந்தால் வயிற்று வலி பறந்து போய் விடும்.