உங்களுக்கு தலை முடி வெடிப்பு பிரச்சனை இருக்கா? அப்போ முட்டையின் வெள்ளை கருவை இப்படி பயன்படுத்துங்கள்!!

0
144
Do you have hair fall problem? Then use egg white like this!!
Do you have hair fall problem? Then use egg white like this!!

உங்களுக்கு தலை முடி வெடிப்பு பிரச்சனை இருக்கா? அப்போ முட்டையின் வெள்ளை கருவை இப்படி பயன்படுத்துங்கள்!!

பெண்களுக்கு அவர்களின் கூந்தல் தான் அழகு.கருமையான அடர்த்தியான கூந்தல் இருந்தால் அவர்களின் அழகு மேமையடையும்.வாரத்தில் இருமுறை தலை குளித்தல்,அனைத்து தினங்களிலும் தலைக்கு எண்ணெய் வைத்தல் போன்றவற்றை முறையாக செய்து வந்தால் தலை முடி ஆரோக்கியமாக இருக்கும்.

பள்ளி பருவத்தில் தலைக்கு எண்ணெய் வைத்து ஜடை பின்னி ரிப்பன் கட்டும் பழக்கம் இருந்ததால் தான் முடிவு உதிர்வு,முடி வெடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படமால் இருந்தது.ஆனால் பள்ளி பருவம் முடிந்ததும் தலைமுடி உதிர்வு பாதிப்பை பலர் சந்தித்திருப்பீர்.

சிலருக்கு திருமணத்திற்கு பிறகு,குழந்தை பெற்ற பிறகு முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும்.இதற்கு முக்கிய காரணம் முடி வெடிப்பு.இவை கூந்தலின் நுனியில் ஏற்படும் ஒரு பாதிப்பு.

ஒவ்வொரு முடியும் இரண்டாக பிளவு பட்டு இருக்கும்.இந்த முடி வெடிப்பை சில எளிமையான வைத்தியம் மூலம் சரி செய்து கொள்ளலாம்.

*முட்டையின் வெள்ளைக்கரு
*பசும் பால்

ஒரு கிண்ணத்தில் சிறிதளவு பசும் பால் மற்றும் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை போட்டு நன்கு கலந்து விடவும்.

இதை கூந்தலின் நுனி பகுதியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும்.இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்து வந்தால் முடி வெடிப்பு பிரச்சனை சரியாகும்.

*தயிர்
*வாழைப்பழம்

ஒரு கிண்ணத்தில் ஒரு துண்டு வாழைப்பழம் மற்றும் 3 தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்கு மசிக்கவும்.இதை கூந்தலின் நுனி பகுதியில் தடவி விடவும்.30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.இவ்வாறு செய்தால் முடி வெடிப்பு பிரச்சனை சரியாகும்.

*பாதாம் எண்ணெய்
*ஆலிவ் எண்ணெய்
*விளக்கெண்ணெய்

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய்,ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.ஒரு மணி நேரத்திற்கு பிறகு தலைக்கு குளிக்கவும்.இவ்வாறு செய்தால் முடி வெடிப்பு பிரச்சனை நீங்கி அடர்த்தியாக முடி வளரும்.