அஜீரண கோளாறு ஏற்படுகிறதா! இந்த வைத்தியத்தை பயன்படுத்தினால் அஜீரணக் கோளாறு வராது!!
சின்ன வெங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இந்த சின்ன வெங்காயத்தை வெறும் வயிற்றிலோ, தேனில் ஊறவைத்த சாப்பிட்டு வந்தாலோ உடலில் பல ஆரோக்கிய மாற்றங்கள் தென்படும். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோம்.
சின்ன வெங்காயம் என்றாலே ரத்தத்தைச் சுத்திகரிக்கப் பயன்படும் என்பது உங்களுக்குத் தெரிந்தது தான். அதிலும் தேனில் ஊறவைத்த வெங்காயம் என்றால் இன்னும் கூடுதல் பலனைத் தரும்.
தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
அஜீரணக் கோளாறை போக்க:
சின்ன வெங்காயம்,தேன் இரண்டிலுமே மிக அதிக அளவில் ஆன்டிஆக்சிடென்ட்கள் இருக்கின்றன. இவை நம்முடைய உடலின் ஜீரண சக்தியை மேம்படுத்தி மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. இதனால் அஜீரணக் கோளாறு உண்டாவது தடுக்கப்படும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
சின்ன வெங்காயம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. குறிப்பாக நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனம் ஆவதால் உண்டாகிற மூச்சு பிரச்சனைகள், ஆஸ்துமா,சளித்தொல்லை நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சின்ன வெங்காயம் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும், இந்த பிரச்சனை இருப்பவர்கள் தினசரி காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாகும்.
தொப்பை குறைய:
இந்த தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து தொப்பை குறையும். குறிப்பாக அடிவயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள ஊளைச் சதையை குறைக்கும்.
தேன் வெங்காயம் செய்வது எப்படி?
ஒரு சுத்தமான பாத்திரம் அல்லது கண்ணாடி பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் நன்கு தோலுரித்து இரண்டாகக் கீறிய சின்ன வெங்காயத்தைப் போட்டு அது முழுகும் அளவுக்கு தேனை ஊற்ற வேண்டும்.
இரண்டு நாட்கள் அப்படியே ஓரமாக, கைப்படாமல் எடுத்து வைக்க வேண்டும்.
இரண்டு நாட்கள் கழித்து சின்ன வெங்காயத்தில் தேன் நன்றாக இறங்கி இருக்கும்.நீங்கள் வைத்ததை விட சற்று நீர்த்துப் போயிருக்கும்.ஏனெனில் வெங்காயத்தில் உள்ள நீர்ச்சத்தும் நீர்ச்சத்தும் தேனுடன் சேர்ந்து ஊறி இருக்கும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பலன்கள் கிடைக்கும்.