உங்கள் வீட்டில் படிந்திருக்கும் அழுக்கு,எண்ணெய் பிசுபிசுப்பை அகற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
பேக்கிங் சோடா – ஒரு தேக்கரண்டி
வினிகர் – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு வினிகர் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை வீட்டில் எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள இடத்தில் ஊற்றி தேய்த்தால் அவை எளிதில் நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:-
எலுமிச்சம் பழம் – ஒன்று
உப்பு – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு வீட்டில் எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள இடத்தில் ஊற்றி தேய்த்தால் கறைகள் சீக்கிரம் நீங்கும்.
தேவையான பொருட்கள்:-
பாத்திரம் கழுவும் திரவம் – ஒரு தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி அளவிற்கு பாத்திரம் கழுவும் திரவத்தை அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.
இதை வீட்டில் எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள இடத்தில் ஊற்றி தேய்த்தால் அவை முழுமையாக நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)டூத் பிரஷ் – ஒன்று
2)எலுமிச்சம் பழம் – ஒன்று
3)பாத்திரம் கழுவும் திரவம் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
கிண்ணத்தில் எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி பாத்திரம் கழுவும் திரவத்தை ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.
பிறகு அதில் பிரஸ் நினைத்து எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள பகுதியில் வைத்து தேய்த்தால் அவை சீக்கிரம் நீங்கிவிடும்.