இந்தியாவில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.ரயில் பயணம் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏதுவான போக்குவரத்தாக இருந்தாலும் டிக்கெட் செய்வது மட்டும் எளிதற்ற காரியமாக இருக்கிறது.குறிப்பாக பண்டிகை காலங்களில் அவ்வளவு எளிதில் டிக்கெட் முன்பதிவு செய்வதுவிட முடியாது.
இந்நிலையில் தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்வோருக்கு இந்திய ரயில்வே ஏராளமான வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.இதில் UTS என்ற செயலி இருந்தால் உடனடியாக டிக்கெட் புக் ஆகிவிடும்.
இந்தசெயலின் மூலம் முன்பதிவு செய்யாமல் பயணிக்க கூடிய அனைத்து வகை பயணச் சீட்டுகளையும் மொபைலில் எளிதில் புக் செய்துவிடலாம்.இதனால் பயணிகளின் நேரம் சேமிக்கப்படுகிறது.இந்த செயலி ஆண்ட்ராய்டு,ஐஓஎஸ் கொண்ட அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்டுத்தலாம்.
UTS செயலில் டிக்கெட் புக் செய்வது எப்படி?
முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் UTS செயலியை பதிவிறக்கம் செய்யவும்.பிறகு உங்கள் செல்போன் நம்பரை பதிவிட்டு OTP எண் பயன்படுத்தி உள் நுழையவும்.
பிறகு நீங்கள் முதன் முதலாக டிக்கெட் வாங்குகிறீர்கள் என்றால் “Normal Booking என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.பிறகு Travel (Paperless ) என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் Depart from)—> going to என்ற ஆப்ஷன் மற்றும் ரயில் நிலைய கோடு ஷோ ஆகும்.
இதில் நீங்கள் ரயில் நிலையம் மற்றும் ரயிலில் பயணம் செய்யும் இடத்தையும் செலக்ட் செய்ய வேண்டும்.பிறகு “Next” என்பதை கிளிக் செய்து டிக்கெட்டிற்கு உரிய பணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.பண பரிவர்த்தனை முடிந்த உடனே நீங்கள் புக் செய்த டிக்கெட் திரையில் தோன்றும்.