உங்களுக்கு இந்த தகுதி இருக்கா? அப்போ தமிழக அரசின் 1.20 லட்சம் கடன் கிடைக்கும்!

Photo of author

By Rupa

Tamilnadu Gov: விவசாயத்தை ஊக்குவிக்கவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் ஆடு, மாடு, கோழி வளர்ப்புக்கு மானியம் வழங்கப்பட்டு வரும் வகையில் தற்பொழுது கறவை மாடுகள் வாங்குவதற்காக 1.20 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் செழுமையாக இருக்க விவசாயம் செழிக்க வேண்டும். அந்த வகையில் மத்திய அரசும் மாநில அரசும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் பல திட்டங்களை அமல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பாசனத்திற்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கும் பொழுது அரசானது விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் மற்றும் விதைகளை வழங்கி வருகின்றது.

விவசாயத்துடன் கூடுதல் வருமானம் பெறுவதற்கு விவசாயிகள் ஆடு, மாடு, குழி ஆகியவற்றையும் வளர்த்து வருகின்றனர். அந்த வகையில் ஆடு வளர்ப்பவர்களுக்கும், குழி வளர்ப்பவர்களுக்கும், மாடு வளர்ப்பவர்களுக்கும் கடனுதவி செய்து வருகின்றது.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியானது பிற உள்ளூர் வங்கிகளுடன் இணைந்து ஆடு வளர்க்க 50 சதவீதம் தள்ளுபடியுடன் கடன் உதவி வழங்கி வருகின்றது. அந்த வகையில் 100 ஆடுகள் முதல் 500 ஆடுகள் வரை வளர்க்க விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றது. விவசாயிகள் 200 ஆடுகளை வாங்கி வளர்ப்பதற்கு 40 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டு வருகின்றது. அதே போல 500 ஆடுகள் வளர்ப்பதற்கு 1 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த கேள்விக்கு 50 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகின்றது.

மத்திய அரசை போலவே மாநில அரசான தமிழக அரசும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பவர்களுக்கு 1500 கோடி ரூபாய் வரை வட்டியில்லா கூட்டுறவுக் கடனை வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறுவதற்கு அருகில் இருக்கும் கூட்டுறவுத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.  இதன் அடுத்தகட்டமாக தமிழக அரசு கறவை மாடுகளை வாங்குவதற்கு 1.20 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பாக கறவை மாடுகள் வாங்குவதற்கான திட்டம் அமல்படுத்தப்படுகின்றது. இந்த திட்டம் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்(ஆவின்) மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலமாக இந்த கறவை மாடுகள் வாங்கும் திட்டத்தை செயல்படுத்தப்படுகின்றது.

இந்த திட்டம் மூலமாக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நபர்களுக்கு பால் பண்ணை தொடங்குவதற்காக நபர் ஒன்றுக்கு 1.20 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. கறவை மாடு ஒன்றுக்கு 60000 ரூபாய் வீதம் வழங்கப்படவுள்ளது.

இந்த கடனை திருப்பி செலுத்த மூன்று ஆண்டுகள் காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டியும் பயனாளிகளின் பங்காக 5 சதவீதமும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடன் உதவி பிற்படுத்தப்படோர், மிகவும் பிற்படுதப்பட்டோர், சீர் மரபினர் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றது. 18 வயது முதல் 60 வயது முதல் உள்ள நபர்கள் இந்த கடன் உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் 1லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கடனுதவி பெறுவதற்கு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த கடனுதவி குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படும்.

இந்த கடனுதவி பெற விருப்பமும் மேற்கண்ட தகுதியும் உள்ள நபர்கள் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மூலமாகவும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த கடனுதவி பெறுவதற்கு சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவை இருக்க வேண்டும்.