உங்கள் போனில் UPI ஆப் இருக்கா? அப்போ இனி ATM கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கலாமே!
இன்றைய உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனை தனி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.குறிப்பாக இந்தியாவில் பெரும்பாலான மக்கள் காகித பணத்தாளிற்கு பதிலாக ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டு வருவதால் நாடு தற்பொழுது டிஜிட்டல் இந்தியாவாக மாறிவருகிறது.
அதேபோல் அரசின் நலத்திட்டங்கள் பெற,முதலீடு,கடன் உள்ளிட்டவைகளுக்காக மக்கள் அனைவரும் தற்பொழுது வங்கி கணக்கு வைத்திருக்கின்றனர்.என்னதான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை அதிகரித்தாலும் சில விஷயங்களுக்கு காகிதத்தாள் பயன்படுத்தியாக வேண்டும் என்ற உள்ளது.இதனால் ATM கார்டுகள் மூலம் பணம் எடுத்தல்,ATM மிஸின் மூலம் பணம் டெபாசிட் செய்தல் போன்ற செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ,தமிழ்நாடு,டெல்லி,மும்பை உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் அதிகப்படியான ஏடிஎம் மையங்கள் செயல்பாட்டில் உள்ளது.ATM-இல் பணம் எடுக்க கார்டை இன்சர்ட் செய்து தொகை,பின் நம்பர் உள்ளிட்டவைகளை என்டர் செய்ய வேண்டும்.
ஆனால் தற்பொழுது ATM கார்டு இல்லாமலேயே கார்டுலெஸ் டிரான்ஸாக்ஷன் முறைப்படி இனி பணம் எடுக்க முடியும்.நீங்கள் தங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ மொபைல் பேங்கிங் செயலி பயன்படுத்தி இந்த முறையில் பணம் எடுக்க முடியும்.
மொபைல் பேங்கிங் செயலியின் மூலம் ATM- இல் உள்ள QR கோடை ஸ்கேன் செய்து கார்டு பயன்படுத்தாமல் பணம் எடுக்க முடியும்.ATM கார்டு மூலம் பண மோசடி செய்வது அதிகரித்து வருவதால் தற்பொழுது அறிமுகப்படுத்தி இருக்கும் கார்டுலெஸ் டிரான்ஸாக்ஷன் மூலம் தங்கள் பணத்திற்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கிறது.இந்த புதிய முறை மூலம் அதிகபட்சம் ரூ.10,000 வரை மட்டுமே பணம் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.