உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இருக்கா? இது மட்டும் இருந்தால் போதும் கடனே இருக்காது!!.          

0
486

உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இருக்கா? இது மட்டும் இருந்தால் போதும் கடனே இருக்காது!!.

இயற்கை பொருட்களில் ஆன்மிக ரீதியாகவும் இல்லறத்தில் நன்மை பெருகவும் வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் சில பொருட்கள் வைத்திருந்தால் மகாலட்சுமி அவ்விடத்தில் குடிபுகுவாள் என கூறப்படும். அவற்றில் முதன்மையான பொருள் தான் இந்த வலம்புரி சங்கு.

செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் பார்வை பட்டால் இல்லறம் மற்றும் தொழிலும் சிறந்து விளங்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமியின் பார்வையானது ஒருவர் இழந்த செல்வம், பெயர், புகழ் போன்றவற்றை திரும்ப பெற அருள்பாலிக்கும் என்பது நம்பிக்கை.

வலம்புரி சங்கை வைத்து எப்படி பூஜை செய்வது வாங்க பார்க்கலாம்,வலம்புரி சங்கை வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் சுத்தமாக வைத்து தினமும் பூஜை செய்து வர வேண்டும். வாழையிலை அல்லது தட்டில் பச்சரிசி அல்லது நெல் வைத்து அதன்மீது வலம்புரி சங்கை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

வலம்புரி சங்கு வடக்கு அல்லது தெற்கு முகம் பார்த்து தான் வைக்க வேண்டும்.வலம்புரி சங்கில் தண்ணீர் மற்றும் துளசி வைத்து பூஜை செய்வது இன்னும் சிறப்பு.வலம்புரி சங்கை வைத்து பூஜை செய்யும்போது மலர்கள், தங்கம் அல்லது பணம் வைத்தும் பூஜை செய்வது சிறப்பு.வீட்டு கடன் மற்றும் தொழில் கடன் தீர்ந்து கஷ்டங்கள் விலகி செல்வம்பெருகும். பௌர்ணமி வளர்பிறை அஷ்டமி போன்ற சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருமே ஆரோக்கியமுடன் இருப்பார்கள்.

வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதை தினமும் குடித்து வந்தால் ஆரோக்கியம் சிறக்கும்.பஞ்சமி திதி நாளில் வலம்புரி சங்கில் தூய்மையான பசும்பால் ஊற்றி பூஜை செய்து வந்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.செவ்வாய் தோஷம் உள்ள நபர்கள் வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி 27 செவ்வாய்க்கிழமைகள் அம்மனுக்கு பூஜை செய்து வந்தால் தோஷம் விலகும், திருமணம் கூடிய விரைவில் நடக்கும் என்பது நம்பிக்கை.

Previous articleஇந்த 13 மாவட்டங்களுக்கு மட்டும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Next articleஇந்த காய்ச்சல் பற்றி தெரிஞ்சுக்கோங்க!..டெங்கு காய்ச்சலின் மூன்று கட்டங்கள்? வெளிவரும் பகிர் தகவல்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here