கை கால் முகத்தில் சுருக்கம் உள்ளதா? அப்போ இந்த பேஸ்டை அப்ளை செய்யுங்கள்.. இரண்டே நாளில் ரிசல்ட் கிடைத்துவிடும்!

Photo of author

By Divya

கை கால் முகத்தில் சுருக்கம் உள்ளதா? அப்போ இந்த பேஸ்டை அப்ளை செய்யுங்கள்.. இரண்டே நாளில் ரிசல்ட் கிடைத்துவிடும்!

நம் உடலில் முகம்,கை மற்றும் கால்களில் தான் அதிகளவு சுருக்கம்,வறட்சி ஏற்படுகிறது.இதனால் நாம் எளிதில் வயதான தோற்றத்தை அடைந்து விடுகின்றோம்.இந்த தோல் சுருக்கத்தை சரி செய்ய பல வித க்ரீம்களை அப்ளை செய்தும் எந்த ஒரு பயனும் இல்லை என்று நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வீட்டு வைத்தியத்தை பின்பற்றி வந்தால் சில தினங்களில் தீர்வு கிடைத்து விடும்.

தீர்வு 01:-

1)வெண்ணெய் பால்
2)கட்டி மஞ்சள் தூள்

ஒரு மஞ்சள் கிழங்கை அரைத்து வெண்ணெய் மிதக்கும் பாலில் கலக்கவும்.பிறகு இதை உடல் முழுவதும் பூசி குளித்து வந்தால் தோல் சுருக்கம் நீங்கி மிருதுவாக மாறும்.

தீர்வு 02:-

1)கற்றாழை ஜெல்
2)செம்பருத்தி ஜெல்

ஒரு மிக்ஸி ஜாரில் 5 செம்பருத்தி பூவின் இதழ் மற்றும் ஒரு கற்றாழை மடலின் ஜெல்லை போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை உடல் முழுவதும் அப்ளை செய்து குளித்து வந்தால் தோல் வறட்சி,சுருக்கம் நீங்கி மிருதுவாக மாறும்.

தீர்வு 03:-

1)வாழைப்பழ தோல்
2)மஞ்சள் தூள்

ஒரு வாழைப்பழத்தின் தோலை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து உடலில் பூசி குளிக்கவும்.இவ்வாறு செய்வதால் தோல் சுருக்கம் முழுமையாக நீங்கும்.

தீர்வு 04:-

1)தேங்காய் எண்ணெய்
2)வெந்தயம்

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை தேங்காய் எண்ணையில் கலந்து உடலுக்கு பயன்படுத்தி குளித்து வந்தால் சரும சுருக்கம் அகலும்.சருமம் மென்மையாகவும்,இளமை தோற்றத்துடனும் காணப்படும்.

தீர்வு 05:-

1)ஆலிவ் ஆயில்
2)பாதாம் ஆயில்

மேலே குறிப்பிட்டுள்ள எண்ணெய்களை சம அளவு எடுத்து சருமத்தில் அப்ளை செய்து வந்தால் சுருக்கம்,வறட்சி நீங்கி மிருதுவாக மாறும்.