மாதந்தோறும் ரூ.5000 வருமானம் தரும் சூப்பர் ஸ்கீம் பற்றி தெரியுமா? இந்த பொன்னான வாய்ப்பை தவற விடாதீர்கள்!

0
144
Rs.12000 will come to your bank account every month!! Do this immediately!!
Rs.12000 will come to your bank account every month!! Do this immediately!!

மாதந்தோறும் ரூ.5000 வருமானம் தரும் சூப்பர் ஸ்கீம் பற்றி தெரியுமா? இந்த பொன்னான வாய்ப்பை தவற விடாதீர்கள்!!

அஞ்சல் அலுவலங்களில் பல நல்ல சேமிப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.பிறந்த குழந்தைகள் முதல் தள்ளும் பெரியவர்கள் வரை அனைவரின் எதிர்கால வாழக்கையில் பண அடிப்படையிலான பிரச்சனைக்கு தீர்வாக அஞ்சல் திட்டங்கள் இருக்கின்றது.செல்வமகள் சேமிப்பு,வருங்கால வைப்பு நிதி,தொடர் வைப்பு நிதி,மூத்த குடிமக்கள் சேமிப்பு,தேசிய சேமிப்பு பத்திரம்,குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டு என்று அதிக வட்டி தரக் கூடிய தரமான சேமிப்பு திட்டங்கள் அஞ்சல் அலுவலகங்களில் உள்ளது.

அரசு மற்றும் தனியார் வங்கிகளின் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை காட்டிலும் அஞ்சல் அலுவகங்களில் அதிக வட்டி வழங்கப்படுகிறது.அது மட்டுமின்றி தங்கள் முதலீட்டு தொகைக்கு 100% பாதுகாப்பு இருக்கிறது.

அஞ்சல் அலுவலக திட்டங்களில் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது முதிர்வு காலத்தில் தான் சில சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி தொகை கிடைக்கும்.ஆனால் நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு மாதந்தோறும் வட்டி கிடைக்கும் ஒரு அசத்தல் திட்டம் பற்றி தெரியுமா? இவை மாந்தத்திர வருமான திட்டம்(MIS) என்று அழைக்கப்படுகிறது.இதில் தனி அல்லது கூட்டுக்கணக்கு தொடங்கி வட்டி பெற முடியும்.

மாதாந்திர வருமானத் திட்டம்(MIS)

அஞ்சல் அலுவலங்களில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.நீங்கள் கூட்டுக் கணக்கு தொடங்குகிறீர்கள் என்றால் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.ஒற்றை கணக்கை கூட்டுக்கணக்காகவும் மாற்ற முடியும்.அதேபோல் கூட்டுக்கணக்கை ஒற்றை கணக்காகவும் மாற்ற முடியும்.

ஒருவர் மாதாந்திர வருமான திட்டத்தில் ரூ.50000 முதலீடு செய்கிறார்கள் என்றால் அவருக்கு மாதந்தோறும் ரூ.275 ரூபாய் வட்டியாக கிடைக்கும்.ரூ.1,00,000 முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.550 வட்டி கிடைக்கும்.கணக்கு தொடங்கியவர் மரணம் அடைந்து விட்டால் விண்ணப்பத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் நாமினிக்கு முதலீட்டு தொகை கிடைக்கும்.

விண்ணப்பம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:

1)ஆதார் கார்டு

2)பான் கார்டு

3)பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

4)வாக்காளர் ஐடி

5)ரேசன் கார்டு

அருகில் இருக்கின்ற அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று மாதாந்திர சேமிப்பு திட்டத்திற்கான விண்ணபத்தை பூர்த்தியிட்டு கேட்கப்படும் ஆவணங்களை இணைத்து கணக்கை தொடங்கலாம்.