தலை நகரம் இல்லாத நாடு எது தெரியுமா?? இவ்வளவு சின்ன நாடா ஆது??

Photo of author

By CineDesk

தலை நகரம் இல்லாத நாடு எது தெரியுமா?? இவ்வளவு சின்ன நாடா ஆது??

நம்மில் பலருக்கு இந்த உலகில் உள்ள சில விடயங்களை பற்றி தெரிந்திருக்கும். ஆனால் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தலைநகரம் என்ற ஒன்று உள்ளது. கட்டாயமாக நாடு என்று இருந்தால் அதற்கு தலைநகரம் என்று ஒன்று இருக்கும். ஆனால் இந்த உலகில் தலை நகரமே இல்லாத ஒரு நாடு இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?

ஆம் இந்த உலகில் தலைநகரம் இல்லாத ஒரு நாடு உள்ளது. அது தான் நவ்ரூ. பசுபிக் பெருங்கடலில் உள்ள சிறிய தீவு. மேலும் இந்த நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்பட்டு விடுவீர்கள். நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு தெரியுமா? நவ்ரூ நாட்டின் மொத்த பரப்பளவு 21 சதுர கிலோமீட்டர். இது தான் உலகிலேயே மூன்றாவது சிறிய நாடும் கூட. மேலும் இந்த நாட்டில் உள்ள மக்கள் தொகை அளவுகூட குறைவு என்று கூறுகிறார்கள். மேலும் இது குறைவான மக்கள்தொகை வாழும் நாடுகளில் இரண்டாவது இடம் வகிக்கிறது.

இந்த நாட்டில் குறைந்த பட்சம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தான் வாழ்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட சிறிய மற்றும் மக்கள்தொகை குறைவாக உள்ள தலைநகரம் இல்லாத நாட்டை பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்கள்?