திமுக இத்தனை இடங்களில் போட்டியிடுகிறதா? வாயைப் பிளக்கும் ஆளும் தரப்பினர்!

Photo of author

By Sakthi

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. திமுக 178 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகள் 56 இடங்களில் போட்டியிடுவதாக தகவல் கிடைத்திருக்கிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 தகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 தொகுதிகளும், அதேபோல மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஐந்து தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஐந்து தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், கொங்கு மண்டல தேசிய கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் போன்றவற்றை தவிர்த்து இன்னும் சில கூட்டணி கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நிற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவிதத்தில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 195 இடங்களில் போட்டி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

1971 ஆம் வருடம் நடந்த பொதுத் தேர்தலில் திமுக 184 நிலங்களிலும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 203 இடங்களிலும் வெற்றியை ருசித்தது. இதுவே இதுவரையில் திமுகவின் வரலாற்றுச் சாதனையாக இருந்து வருகிறது. இந்த சாதனையை 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முறியடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஸ்டாலின் செயலாற்றி வருவதாக சொல்லப்படுகிறது.