தமிழக அரசுக்கு வந்த நன்கொடை எவ்வளவு தெரியுமா? நன்கொடை பற்றிய விவரங்கள் இதோ!

முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க அனைவரும் நன்கொடை கொடுத்து வந்த நிலையில் அதன் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா நோய் பரவி மக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.தமிழக அரசு கொரோனா நோய்க்கான பல நல்ல திட்டங்களை அறிவித்த போதிலும் போதிய நிதி இல்லாததால் தமிழக அரசு மக்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக நன்கொடை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

 

கடந்த வாரம் முதலமைச்சர் அவர்கள் நிதி நெருக்கடி நம்மை சூழும் நேரத்தில் பரந்த மனப்பான்மையும் ஈகை குணமும் கொண்ட தமிழக மக்கள் கொரோனா தடுப்பு பணிக்காக தங்களால் முயன்ற அளவு முழுமையாக ஈடுபடுத்தி நிதி வழங்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார். கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து வந்துள்ளனர். அதன் விவரங்களை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.

 

இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகள் கொரோனா தடுப்பு பணிகள் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும், அளிக்கப்பட்ட நன்கொடை குறித்த விவரங்கள் பார்வையாளர்களுக்காக பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

 

அதன்படி நேற்று வரை இணையவழி மூலமாக 29.44 கோடி ரூபாயும்‌, நேரடியாக 39.56 கோடி ரூபாயும்‌ , மொத்தமாக 69 கோடி ரூபாய்‌ நிவாரண நிதியாகப்‌ பெறப்பட்டுள்ளது என அரசு விளக்கம் அளித்துள்ளது.

 

69 கோடி ரூபாய் நிதியிலிருந்து, ரெம்டெசிவிர்‌ மற்றும்‌ உயிர்‌ காக்கும்‌ மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காக 25 கோடி ரூபாயும்‌, மற்ற மாநிலங்களிலிருந்து  ஆக்சிஜனை இரயில்‌ போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்குத்‌ தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்கு  25 கோடி ரூபாயும்‌ என  மொத்தம்‌ 50 கோடி ரூபாய்‌ தொகையை முதற்கட்டமாக  செலவிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

 

Leave a Comment