தினசரி வாழ்வில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவின் அளவு எவ்வளவு தெரியுமா? இனி இந்த தவறை செய்யாதீர்கள்!!

Photo of author

By Rupa

தினசரி வாழ்வில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவின் அளவு எவ்வளவு தெரியுமா? இனி இந்த தவறை செய்யாதீர்கள்!!

பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் இந்த உலகில் சாப்பிட கூட நேரமின்றி ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கின்றோம்.இதனால் உடல் ஆரோக்கியம் மெதுவாக கெடத் தொடங்குகிறது.உடலில் உள்ள உறுப்புகள் சீராக இயங்க உணவு மிகவும் முக்கியமான ஒன்று.

ஆனால் நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.கொழுப்பு,எண்ணெய் நிறைந்த உணவுகளாக இருந்தால் அவை நமக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.கடந்த காலங்களில் காய்கறிகள்,பழங்கள்,தானியங்கள் தான் உணவாக இருந்தது.

நீர்ச்சத்து,நார்ச்சத்து,இரும்பு சத்து,புரதம்,வைட்டமின்கள்,தாதுக்கள்,கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருந்தால் தான் அவை ஆரோக்கியமான உணவு.நாம் உண்ணும் உணவு உடலில் உள்ள நோய்களை குணமாக்க வேண்டும்.ஆனால் இன்றுள்ள உணவுகள் உடலில் நோய் பாதிப்புகளை உண்டாக்கும் விதமாக இருக்கிறது.

இதனால் உணவு விஷமாக்கிப்போக மருந்தை உணவாக எடுத்துக் கொண்டு வருகிறோம்.இதனால் உணவுமுறையில் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.காலை உணவை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.அதுவும் 8 மணிக்குள் காலை உணவை உட்கொள்ள வேண்டும்.

காலை உணவில் அரிசியை தவிர்த்து சிறுதானிய வகைகளான ராகி,கோதுமை,ரவை உள்ளிட்டவைகளால் ஆன உணவுகள்,கீரைகள்,முளைக்கட்டிய தானியங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.அது ,மட்டுமின்றி சாப்பிடும் பொழுது தண்ணீர் பருக்க கூடாது.சாப்பிடுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் தண்ணீர் குடிக்கலாம்.உணவு உட்கொண்ட 45 நிமிடங்களுக்கு பின்னர் தண்ணீர் குடிக்கலாம்.

மதிய நேரத்தில் அதிகளவு நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.பழச்சாறு,நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.மதிய உணவிற்கு பின்னர் தூங்கக் கூடாது.

இரவில் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.அசைவம்,கீரைகள்,கோதுமை,மைதா,முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களை இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும்.இரவில் சாப்பிட்ட உடன் உறங்கச் செல்லக் கூடாது.அது மட்டுமின்றி நீராகாரம் அதிகம் எடுத்துக் கொள்ள கூடாது.இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்.