நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்துள்ள தொழிலில் எவ்வளவு முதலீடு செய்தார்கள் தெரியுமா?? இத்தனை கோடியா கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!!
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். 2003ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான. மேலும் நயன்தாரா 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருக்கிறார். இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 தொடங்கி இதுவரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார். ரசிகர்கள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகின்றனர்.
மேலும் இவர் தமிழில் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் தமிழில் முன்னணி நடிகராக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெருமளவு ஆதரவைப் பெற்றிருந்தது. மேலும் இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
நடிகை நயன்தாரா மற்றும் அவரின் காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை நயன்தாரா தனது காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும் அந்த நிறுவனத்தின் பெயர் சாய் வாலே என்ற நிறுவனம் ஆகும். அது மட்டுமின்றி அவர்கள் இருவரும் புதிதாக இந்த பிஸ்னஸிற்காக 5 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.