பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பிடிவாத குணம் இருப்பது இயல்பான ஒரு விஷயமாக உள்ளது.குறிப்பாக குழந்தைகளின் பிடிவாத குணம் அதிகமாகே இருக்கின்றது.குழந்தைகள் தங்கள் பிடிவாத குணத்தால் நினைத்த காரியத்தை சாதித்து விடுகின்றனர்.அழுது அடம் பிடித்து நினைக்கும் விஷயத்தை அடையும் குழந்தைகளை ஆரம்ப நிலையில் திருத்த தவறினால் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
குழந்தைகளுக்கு அடம் பிடிக்கும் குணம் வர காரணம் அவர்கள் பெற்றோர்தான்.குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்திருப்பதால் அவர்கள் கேட்கும் விஷயங்களுக்கு எல்லாம் பெற்றோர் தலையாட்டுகின்றனர்.குறும்பு,பிடிவாதம் போன்றவை இருந்தால்தான் அது குழந்தை என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் இந்த குணங்களே அவர்களுக்கு ஆபத்தாக மாறிவிடும்.குழந்தைகளுடன் அவர்களின் பிடிவாத குணம் வளர்வது வாழ்க்கைக்கு நல்லது அல்ல என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.குழந்தைகள் பெரும்பாலும் டாய்ஸ்,ஸ்னாக்ஸ் போன்றவற்றிற்குதான் அடம் பிடிப்பார்கள்.
அவர்கள் ஆரோக்கியமான உணவுகளை கேட்டால் தவறாமல் வாங்கிக் கொடுங்கள்.ஆனால் பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்று எந்தஒரு ஆரோக்கியமும் இல்லாத உணவுகளை வாங்கிக் கொடுத்தால் அது அவர்களின் பழக்கத்தை மோசமாக்கிவிடும்.
குழந்தைகள் கேட்கிறார்கள் என்று அவர்கள் விருப்பப்பட்டதை எல்லாம் செய்தால் பின்னாளில் அவர்கள் இதை சத்தமாக பயன்படுத்தி எதையும் வாங்கி விடுவார்கள்.குழந்தைகள் தேவையில்லாத விஷயங்களுக்கு அழுது அடம் பிடித்தால் அவர்களை சமாதானப்படுத்த அவர்களின் போக்கில் பெற்றோர் செல்லக் கூடாது.குழந்தைகள் அதிக அடம் பிடித்தால் அவர்களை கண்டு கொள்ளக் கூடாது.நாம் இப்படி செய்தால் அவர்களுக்கு பிடிவாத குணம் ஏற்படுவது மெல்ல மெல்ல குறையும்.அவர்களின் பிடிவாத குணத்திற்கு
முக்கியத்தும் கொடுக்காமல் இருந்தாலே அவர்கள் தானாக தங்கள் வழிக்கு வந்துவிடுவார்கள்.