வாஸ்து பிரச்சனைகள் நீங்கி வீட்டில் செல்வம் சேர அருமையான வழி

Photo of author

By Pavithra

வீடு கட்டும் போதும் அல்லது வீடு கட்டிய பிறகும் பெரும்பாலோருக்கு வரும் பிரச்சனைகளில் ஒன்று தான் வாஸ்து. வாஸ்துபடி வீட்டை கட்டவில்லை என்பதால் தான் வீட்டில் பிரச்சனைகள் வருவதாக பலரும் கூறுவதுண்டு. இந்நிலையில் இதற்காக பலர் நன்றாக கட்டிய வீட்டை இடித்து வாஸ்து படி மாற்றி அமைப்பர். ஆனால் இந்த பிரச்சனைகள் நீங்கி வீட்டில் செல்வம் சேர மஞ்சளை பயன்படுத்தலாம் என்றும் பலரால் நம்பப்படுகிறது.

மஞ்சள் என்பது கிருமி நாசினியாகவும் மருத்துவத்திற்கு நல்ல மருந்து பொருளாகவும் மட்டுமின்றி ஆன்மீகம் சார்ந்த அனைத்திர்க்கும் மஞ்சள் என்பது இன்றியமையாத ஒன்றாகும். திருமண முதல் எந்த சடங்காகினும் மஞ்சள் இன்றி எதுவும் கிடையாது. அதே போன்று கோவில்களிலும் மஞ்சள் இன்றி எதுவுமில்லை. அப்படிப்பட்ட மஞ்சளை நீங்கள் முறையாக பயன்படுத்தினால் வீட்டில் செல்வமும் சேரும் வாஸ்து பிரச்சனையும் நீங்கும் .

மஞ்சள் எவ்வாறு பயன்படுத்துவது?

ஆன்மீகத்தின் படி மஞ்சள் என்பது குருபகவானின் நேரடி ஆற்றலாகக் கருதப்படுகிறது.எனவே தான் குரு பகவானின் பலம் குறைவாக உள்ள ராசிக்காரர்கள் வியாழக்கிழமைதோறும் பச்சை மஞ்சள் அதாவது வெட்டி எடுத்தவுடன் வேகாமல் இருக்கும் மஞ்சளை சிறிது மஞ்சள் துணியில் கட்டி கையில் கட்டிக் கொள்வதால் குரு பலம் கூடும் என்பது ஆன்மிகத்தின் நம்பிக்கை.

நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தை பெற மஞ்சளுடன் கிராம்பு சேர்த்து பயன்படுத்தும் போது நல்ல பலன்களைத் தரவல்லது.

வாஸ்து பிரச்சனைகள் நீங்கி வீட்டில் செல்வம் சேர அருமையான வழி

வீட்டில் உள்ள வாஸ்து பிரச்சனைகள் நீங்க 15 நாட்கள் தொடர்ந்து மஞ்சளை அரைத்து நீரில் கலந்து வீடு முழுவதும் தெளித்து வர எதிர்மறை ஆற்றல் அத்தனையும் நீங்கி சில வாரங்களில் உங்கள் வீட்டில் சுபிட்சம் கிடைக்கும். வீட்டின் ஸ்வஸ்திக் முத்திரையை மஞ்சளில் போட்டு வைத்தால் வீட்டில் வாஸ்து பிரச்சினைகள் தீர்ந்து நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.

பூஜை அறையில் ஒரு நல்ல காலைப்பொழுதில் 5 மஞ்சள் துண்டுகளுடன் சிறிது அரிசியை சேர்த்து அதை 5 அடி நீளமுள்ள ஒரு மஞ்சள் நிற துணியில் கட்டி வைத்தால் செல்வத்திற்கு அதிபதியான குரு பகவானின் அருள் பெருகி வீட்டில் செல்வங்கள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் தொடர்ந்து சிக்கல் இருந்தால் வளர்பிறையில் வரக்கூடிய முதல் வியாழக்கிழமையில் ஓம் நமோ பகவதே வாசுதேவ நமஹ என்று 108 முறை சொல்லி வருகையில் அனைத்துச் சிக்கல்களும் நீங்கும் என்பது ஆன்மீகத்தின்படி நம்பப் படுவதாகும்.

வேலை செய்யும் இடத்தில் ஒரு மஞ்சள் துணியில் தாய் மஞ்சள் அதாவது கருங்காலி என்று சொல்லப்படும் மஞ்சள் கோமதி சக்கரம் ஆகியவை கட்டிவைக்க உங்கள் வியாபாரம் நன்றாக பெருகும் என்பது ஆன்மிக அடிப்படையில் நம்பப்படுகிறது.