தினமும் நாம் பயன்படுத்தி வரும் ஓரும் அழகுப் பொருள் சோப்.நமது உடலில் வெளியேறும் வியர்வை வாசனையை கட்டுப்படுத்தி உடலுக்கு ஒருவித புத்துணர்வை அளிக்க சோப் பயன்படுத்துகின்றோம்.
சரும வறட்சி,தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள்,கருப்பு சருமத்தை வெள்ளையாக்குவது என்று அவரவர் தேவைக்கேற்ப சோப் வாங்கி பயன்படுத்தி வருகின்றோம்.மார்கெட்டில் பல வகை வகையான சோப் கிடைக்கிறது.வேப்பிலை,மஞ்சள்,ரோஸ்,சந்தனம் போன்ற பல பிளேவரில் சோப் கிடைக்கிறது.
ஆனால் நமது சருமத்திற்கு ஏற்ற சோப் எது என்பது பலருக்கும் தெரிவதில்லை.அதை பற்றிய அக்கறையும் நம்மில் பலருக்கு இல்லை என்பதால் நமது சருமம் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறது.
சிலருக்கு எண்ணெய் பசை சருமமாக இருக்கலாம்.சிலருக்கு வறண்ட சருமமாக இருக்கலாம்.வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு கிளிசரின் சேர்த்த சோப் தான் பெஸ்ட்.தேங்காய் எண்ணெய் மற்றும் கிளிசரின் சேர்த்து தயாரித்த சோப்பை சருமத்திற்க்கு பயன்படுத்தினால் தோல் வறட்சி நீங்கி இளமையாக இருக்கலாம்.இந்த வகை சோப்பில் வாசனை மற்றும் கண்ணை கவரும் வண்ணங்கள் என்பது இருக்காது.இதுபோன்ற சோப்களை வாங்கி பயன்படுத்தினால் சருமத்தில் ஈரப்பதம் எப்பொழுதும் தக்கவைக்கப்படும்.
எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள் வேப்பிலை மற்றும் சாலிசிலிக் அமிலம் உள்ள குளியல் சோப்பை வாங்கி பயன்படுத்தலாம்.இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசை,முகப்பரு போன்றவற்றை கட்டுப்படுத்தும்.அதேபோல் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் மஞ்சள்,குப்பைமேனி போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட குளியல் சோப்பை பயன்படுத்தலாம்.
அதிக எண்ணெய் பசை கொண்டவர்கள் டீ ட்ரீ ஆயில் கொண்டு செய்யப்பட்ட குளியல் சோப் பயன்படுத்தலாம்.கடைகளில் கெமிக்கல் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் சோப்களை வாங்குவதற்கு பதில் தேங்காய் எண்ணெய் மூலப்பொருளாக கொண்டு வீட்டு முறையில் தயாரித்து பயன்படுத்துவது சருமத்திற்கு நல்லது.
நாம் பயன்படுத்தும் சோப் அதிக வாசனை இல்லாமல் இருந்தால் அது சருமத்திற்கு ஏற்ற சோப் என்று அர்த்தம்.இயற்கையான சோப் அல்லது வண்ணம் இல்லாத சோப் பயன்படுத்துவது நல்லது.கரும்புள்ளிகள் அதிகளவு இருந்தால் அதிரமதுரம் கொண்டு தயாரிக்கப்பட்ட குளியல் சோப் வாங்கி பயன்படுத்தலாம்.நாம் பயன்படுத்தும் சோப் மைல்டாக இருக்க வேண்டும்.