சூர்யாவின் இந்த படத்திற்கு யார் இசையமைப்பாளர் தெரியுமா? சூர்யாவின் நியூ அப்டேட்!

Photo of author

By Rupa

சூர்யாவின் இந்த படத்திற்கு யார் இசையமைப்பாளர் தெரியுமா? சூர்யாவின் நியூ அப்டேட்!

Rupa

Updated on:

Do you know the composer of this film by Surya? Surya's New Update!

சூர்யாவின் இந்த படத்திற்கு யார் இசையமைப்பாளர் தெரியுமா? சூர்யாவின் நியூ அப்டேட்!

ரஜினி,கமல்,விஜய் மற்றும் அஜித் அந்த வரிசையில் சூர்யாக்கென்று பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.கொரோனா காலக்கட்டத்தில் ஹாட்ஸ்டாரில் வெளிவந்த படம் தான் சூரரைப்போற்று.இது உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.

கொரோனா காலக்கட்டத்தில் வெளியானாலும் அதிக அளவு பிரபலமடைந்தது.பெருமளவு வசூல் வேட்டியையும் தந்தது.சூர்யாவுக்கு அதிக புகழையும் பெற்று தந்தது.அந்தவகையில் சூர்யாவின் அடுத்தப்படம் தான் “சூர்யா 40”.

இந்த படத்தை பாண்டியராஜ் இயக்குகிறார்.சன் பிச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார்.இப்படம் ஆரமிக்கும் போதே சூர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அந்த நேரத்தில் சூர்யா நடிக்கும் காட்சிகளை தவிர மற்ற காட்சிகளை படமாக எடுதுத்தனர்.தற்போது கொரோனா தொற்று குணமடைந்த நிலையில் மீண்டும் சூர்யா நடித்து வருகிறார்.இந்த படத்தில் இவரின் வேட்டி சட்டையுடன் அரிவாள் வைத்திருப்பது போல போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர்.அது பெருமளவு வைரலானது.

அதற்கடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் தான் வாடிவாசல்.அந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.அந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.அந்த படத்தின் இசை பணிகள் தொடங்கிவிட்டதாக ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி நல்ல காதல் மற்றும் நாட்டுப்புற பாடலை ஜி.வி.பிரகாஷின் இசையில் எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.தற்போது வாடிவாசல் படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் ஹாஷ்டாக் மூலம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.