பான் கார்டு இணைக்காவிட்டால் எவ்வளவு அபராதம் தெரியுமா? நிதித்துறை அதிரடி அறிவிப்பு!!
ஆதார் கார்டு இல்லாமல் இந்தியாவில் எதுவும் செய்ய முடியாத நிலையில் உருவாகியுள்ளது. மேலும் அனைத்து ஆவணகளுடனும் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்ததுள்ளது. முதலில் பான் கார்டு உடன் ஆதார் கார்டு இணைத்திருக்க வேண்டும். அதனை தொடர்ந்து ஆதார் கார்டு ரேசான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்காதவருக்கு அபதாரம் என்று தற்போது அறிவித்துள்ளது. இந்த இரண்டையும் இணைக்க கடைசி தேதி ஜூன் 30 ஆம் தேதி என்று அறிவித்திருந்தது. மேலும் இணைக்க தவறு பட்சத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் பான் கார்டு செல்லாது என்று அறிவித்திருந்தது. அதனையடுத்து மீண்டும் பான் கார்டு செயல்பட 1000 ரூபாய் அபராத தொகை செலுத்த வேண்டும் என்று அறிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து வருமானம் வரி கணக்கு தாக்கல் செய்ய இன்னும் கொஞ்சம் நாட்கள் தான் உள்ளது. ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் அபராதம் செலுத்திய பான் கார்டு எண் செயல்பட சில நட்கள காத்திருக்க வேண்டும். இந்த நிலையில் வருமான வரி தாக்கல் குறைந்த நாட்கள் உள்ளதால் பான் எண் செயல்படாமல் இருப்பவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கால அவகாசத்தை இழக்கும் அபாயம் உள்ளது.
மேலும் வருமான வரி தாக்கல் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தவில்லை என்றால் அபராத கட்டணம் 5,000 ரூபாய் கட்ட வேண்டும். ஏற்கனவே 1000 ரூபாய் பான் கார்டு எண் செயல்பாட்டிற்கு செலுத்த வேண்டும். பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்கதவர்கள் மொத்தம் 6000 ரூபாய் அபராத தொகை செலுத்த வேண்டும் என்று நிதித்துறை அறிவித்துள்ளது.