பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து ராதிகா விலக காரணம் என்ன தெரியுமா?? கேட்டா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க!!
தமிழ் சீரியல்கள் தற்போது பிரபலமாகி வருகிறத. மேலும் பல சீரியல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் சீரியலுக்கு பேர்போன விஜய் தொலைக்காட்சியும் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் சிறந்த ஐந்து சீரியல்கள் பட்டியலில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது.
இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் முதலில் ஒளிபரப்பானது. மேலும் இந்த தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும். இந்த கதையின் சுருக்கம் என்ன வென்றால் சீரியலின் கதாநாயகி இல்லத்தரசி அவர் அம்மாவாக, மனைவியாக, மருமகளாக போன்ற பல பொறுப்புகளில் வகிக்கின்றார் ஆனால் அவர் படும் பாடு சிலசமயம் பிள்ளைகள், கணவர், மாமியார், மாமனார் அனைவரும் இல்லத்தரசியை எப்படி அவமதிக்கிறார்கள், பாக்கியலட்சுமி எல்லாவற்றையும் எப்படி அனுசரித்துப் போகிறாள் மற்றும் ஒரு கட்டத்தில் அவளின் சுயமரியாதையை எப்படி போராடி மீட்டு எடுத்துள்ளார் என்பது தான் கதை. இந்த தொடர் ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களால் பாராட்டப்பட்டு பெரிதும் ரசிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த தொடருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவு பெருகிக் கொண்டே உள்ளது. இந்த நிலையில் பாகியலஷ்மி நாடகத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரமான ராதிகா கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. அதில் அவர் மிகவும் அழகான வேடத்தில் நடித்து வந்தார். மேலும் அவர் சில நாட்களுக்கு முன்பு சீரியலில் இருந்து விலகிவிட்டார். இது தொடர்பாக இவரின் ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அவர் இந்த வேடம் இதற்கு மேல் நெகட்டிவாக செல்ல இருக்கிறது. மேலும் நான் தற்போது கர்ப்பமாக இருக்கிறேன் அதனால் தான் நான் பாகியலட்சுமி சீரியலில் இருந்து விலகிக் கொண்டேன் என்று தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு காரணத்திற்காக ரசிகர்கள் ஒரு பக்கம் சோகமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் இவர் கர்ப்பமாக இருப்பதை வாழ்த்தி சந்தோஷத்தில் உள்ளனர். தற்பொழுது ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.