வலிமை படத்தின் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா!! உங்க கேலண்டர்ல குறிச்சி வச்சுக்கோங்க!!

Photo of author

By CineDesk

வலிமை படத்தின் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா!! உங்க கேலண்டர்ல குறிச்சி வச்சுக்கோங்க!!

தமிழ் திரையுலகமே பெருமளவில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தை தமிழ் முன்னணி நடிகர் அஜீத் நடித்துள்ளார். மேலும் இப்படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ளார். மற்றும் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் இப்படத்தை பற்றிய எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 1ஆம் தேதி தல அஜித் குமார் அவர்களின் பிறந்த நாள் அன்று முதல் பார்வை போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது .

ஆனால் அந்த சமயத்தில் கொரோனா தொற்றுப் பரவல் இரண்டாம் அலை மக்களிடையே அதிதீவிரமாக பழகி வந்ததன் காரணமாக படத்தின் முதல்பார்வை தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த மாதம் 11 ஆம் தேதி இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த முறை படக்குழு அறிவித்தது தேதியிலேயே படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. மேலும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் பிரம்மாண்டமாக இருந்தது. தமிழ் சினிமா திரையுலகமே எதிர்பாராத அளவுக்கு இப்படத்தின் போஸ்டருக்கு ரசிகர்கள் பெருமளவு ஆதரவு அளித்து இருந்தனர்.

இதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் படப்பிடிப்புமுடிய உள்ள நிலையில் இப்படத்தை வரும் தீபாவளி அன்று வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. இதைப் பற்றிய அறிவிப்பு வரும் வரை ரசிகர்கள் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் முடிய உள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இன்னும் 5 நாட்கள் எடுக்கப்பட உள்ள சண்டை காட்சிகளை படமாக்க படக்குழு மற்றும் நடிகர் அஜித்துடன் வெளிநாடு பயணம் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே இப்படத்தினை ரிலீஸ் தேதியுடன் ஒரு போஸ்டரை விரைவில் வெளியிடப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்களுக்கு இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.