நாம் அனைத்து விஷயங்களையும் ஜோதிட சாஸ்திரப்படி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம்.குறிப்பாக நல்ல காரியங்களை ஜோதிட சாஸ்திரப்படி செய்வதே வழக்கம்.அதேபோல் நல்ல காரியத்தை எந்த நாளில் வேண்டும் எந்த நாளில் செய்யக் கூடாது என்ற கணக்கும் உள்ளது.
வாரத்தில் உள்ள ஏழு நாட்களும் நல்ல நாட்கள்தான்.இருப்பினும் சில காரியங்களை சில தினங்களில் செய்யக் கூடாது.அந்தவகையில் செவ்வாய்க்கிழமை நாளில் எந்த விஷயம் செய்யக் கூடாது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
செவ்வாய்க்கிழமை நாளில் செய்யக் கூடாத விஷயங்கள்:
1)திருமணம்,நிச்சயம் போன்ற சுப நிகழ்ச்சிகளை செவ்வாய்க்கிழமை நாளில் செய்யக் கூடாது.
2)செவ்வாய் கிழமை நாளில் பிறருக்கு பணம் தரக் கூடாது.செவ்வாய் கிழமை நாளில் பணம் சம்மந்தப்பட்ட எந்தஒரு விஷயத்தையும் தொடங்கக் கூடாது.
3)செவ்வாய்க்கிழமை நாளில் நீண்ட பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.செவ்வாய்க்கிழமையில் நகம் வெட்டுவதை தவிர்க்க வேண்டும்.
4)அதேபோல் செவ்வாய்க்கிழமை நாளில் முடி வெட்டுவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் செவ்வாய்க்கிழமை கருப்பு நிறத்தில் ஆடை வாங்கவோ அல்லது அணியவோ கூடாது.
5)செவ்வாய்க்கிழமை நாளில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதிக உப்பு நிறைந்த உணவுகளை செவ்வாய்க்கிழமை நாளில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
6)செவ்வாய்க்கிழமை நாளில் ஷேவிங் செய்வதை தவிர்க்க வேண்டும்.செவ்வாய்க்கிழமை நாளில் தங்க நகைகளை அடகு வைப்பதை தவிர்க்க வேண்டும்.
7)செவ்வாய்க்கிழமை நாளில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.செவ்வாய் நாளில் வீடு கட்ட பூமி பூஜை செய்வதை தவிர்க்க வேண்டும்.
8)இந்த செவ்வாய்க்கிழமை நாளில் கண்ணாடி பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.