இது தெரியுமா? வீட்டை சுத்தப்படுத்தும் துடைப்பம்.. இந்த நாளில் மட்டுமே வாங்க வேண்டும்!!

0
112

நம் வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பத்தை லட்சுமியின் உருவகமாக பார்க்கின்றோம்.இதனால் தான் துடைப்பத்தின் மீது கால் வைக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

வீட்டில் வாஸ்து தோஷங்கள் நீங்க நிச்சயம் துடைப்பத்தை வீட்டில் வைத்திருக்க வேண்டும்.துடைப்பம் அதிர்ஷ்டத்தின் அடையாமளாக பார்க்கப்படுகிறது.வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பம் சேதமாகி இருந்தாலோ அல்லது பழையதாகி விட்டாலோ அதை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு புதிய துடைப்பம் வாங்க வேண்டும்.பழைய மற்றும் சேதமடைந்த துடைப்பத்தை வைத்திருந்தால் வீட்டிற்குள் நிச்சயம் எதிர்மறை ஆற்றல் அதிகரித்துவிடும்.

வீட்டில் அதிக வறுமை வர இதுவும் ஒரு காரணம் என்று முன்னோர்கள் கூறுகின்றனர்.அதேபோல் சிலர் துடைப்பத்தை சரியான இடத்தில் வைக்கமாட்டார்கள்.இதன் காரணமாகவும் வீட்டில் துன்பங்கள்,வறுமை போன்றவை அதிகமாகும்.

துடைப்பத்தை வைத்து வீட்டை சுத்தம் செய்த பிறகு அதை தூக்கி போடாமல் ஓர் இடத்தில் வைக்க வேண்டும்.துடைப்பத்தில் மண்,தூசு இருந்தால் அதை நீக்கிவிட்டு தான் வீட்டில் வைக்க வேண்டும்.

அதேபோல் பழைய துடைப்பத்தை தூக்கி போட்டுவிட்டு ஏதேனும் ஒரு கிழமையில் புதிய துடைப்பம் வாங்கி வரும் பழக்கம் இருந்தால் அதை கைவிட வேண்டும்.துடைப்பம் வாங்க நேரம் காலம் என்ற ஒன்று இருக்கின்றது.வாஸ்து சாஸ்திரப்படி துடைப்பம் வாங்க நினைப்பவர்கள் தீபாவளி நாளில் வாங்கலாம்.

வீட்டில் இருக்கின்ற பழைய துடைப்பத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய துடைப்பம் வாங்க தீபாவளி உகந்த நாளாகும்.இந்நாளில் துடைப்பம் வாங்கினால் வறுமை நீங்கும் என்பது ஐதீகம்.அதேபோல் வாஸ்து சாஸ்திரப்படி செவ்வாய்,வெள்ளிக்கிழமை நாளில் துடைப்பம் வாங்கலாம்.

Previous articleபுகைப்பழத்தை கைவிட முடியலையா? இருக்கவே இருக்கு வீட்டு வைத்தியம்!! ஒரே வாரத்தில் நீங்களே நல்ல மாற்றத்தை உணர்வீர்!!
Next articleவீட்டு பூஜை அறையில் கடவுள் படங்களுக்கு.. எந்த பூக்களை சூட்டுவது நல்லது தெரியுமா?