இவ்வுலகில் மனிதன்,விலங்கு,பறவை,நீர்வாழ் உயிரினம்,ஊர்வன என அனைத்து உயிர்களுக்கும் இயற்கையானது பலம் மற்றும் பலவீனம் கொடுத்து படைக்கிறது.மனிதனோ,விலங்கோ உயிர்களிடத்தில் பாச பிணைப்பு என்பது அடிப்படை விஷயமாக திகழ்கிறது.
உலகிலேயே தாய்க்கும்,குழந்தைக்குமான பாச பிணைப்பு என்பது உணர்வுப் பூர்வமான மற்றும் பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது.ஆனால் இது எல்லா உயிர்களுக்கும் பொருந்துமா என்றால் கேள்விக்குறி தான்.
தேள் போன்ற உயிரினங்கள் பிறந்த உடன் தனது தாயை உணவாக எடுத்துக் கொள்கிறது.இவ்வுலகில் 2000க்கும் மேற்பட்ட தேள் இனங்கள் வாழ்கின்றது.இதில் 25 வகை தேள் இனங்கள் கொடிய விஷம் கொண்டவையாகும்.இந்த தேள்களால் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் உணவு இன்றி வாழ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.காரணம் தேள்கள் வளர்சிதை மாற்றம் கொண்டவை.அது மட்டுமின்றி தேள்கள் 48 மணி நேரம் நீருக்கு அடியில் வாழும் ஆற்றல் கொண்டவை.12 கண்கள் கொண்ட தேள்களுக்கு சரியான பார்வை திறன் கிடையாது என்பது ஆச்சர்யமளிக்கும் உண்மை.
ஆண் மற்றும் பெண் தேள்கள் ஒருவித நடனம் மூலம் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது.இனப்பெருக்கம் முடிந்த உடன் பெண் தேள் தனித்து சென்றுவிடுகிறது.மற்ற உயிரனங்கள் போல் அல்லாமல் தேள்கள் தனது உடலுக்குளேயே முட்டையிட்டு அடைகாத்து குட்டிகளை உருவாக்குகின்றன.இப்படி பிறக்கும் குட்டிகள் வளரும் வரை தாயின் முதுகிலேயே பயணம் செய்கின்றன.இப்படி தாய் தேள் தனது முதுகில் குஞ்சுகளை சுமந்து செல்லும் பொழுது அதன் சதையை சாப்பிட்டு உடலை குழியாக்கி இறக்கச் செய்கின்றன.
டு வந்தால் வெள்ளைப்படுதல் நிற்கும்.