நாம் அடிக்கடி பயன்படுத்தும் காயான எலுமிச்சையில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.எலுமிச்சை சாறை ஜூஸாக சாப்பிட்டு வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.எலுமிச்சை சாறில் சாதம் செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
எலுமிச்சை சாறு உடல் எடை இழப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.எலுமிச்சை சாறு குடித்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.உடலில் இருக்கின்ற தேவையற்ற நச்சுக்கள் வெளியேற எலுமிச்சை பானம் செய்து குடிக்கலாம்.
எலுமிச்சை சாறு உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.அதேபோல் எலுமிச்சை தோலை வைத்து தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.எலுமிச்சை தோலை பொடியாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பிறகு தலைக்கு தேய்த்து வந்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
எலுமிச்சை சாறை தலைக்கு அப்ளை செய்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை ஒழியும்.எலுமிச்சை சாறு தேய்த்தால் தலையில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
வாரம் ஒருமுறை எலுமிச்சை சாறை தலைக்கு தேய்த்து குளித்தால் தலை அரிப்பு ஏற்படாமல் இருக்கும்.எலுமிச்சை சாறு தலைக்கு தேய்த்தால் பேன்,ஈறு ஒழியும்.எலுமிச்சை சாறு முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.
எலுமிச்சை தோலை அரைத்து தலைக்கு தடவி நன்றாக மசாஜ் செய்து குளித்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.தலையில் சிக்கு வாடை வீசினால் எலுமிச்சை எண்ணெயை தலைக்கு அப்ளை செய்யலாம்.எலுமிச்சை சாறை தலைக்கு அப்ளை செய்து குளித்தால் முடி பளபளப்பாக்க மாறும்.
எலுமிச்சை சாறு தலையில் இருக்கின்ற எண்ணெய் பிசுபிசுப்பை போக்கி கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.