சன் பிக்சர்ஸ் சூர்யாவுக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு என்ன தெரியுமா?? மாஸா செஞ்சுட்டாங்க!!

சன் பிக்சர்ஸ் சூர்யாவுக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு என்ன தெரியுமா?? மாஸா செஞ்சுட்டாங்க!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் ரசிகர்கள் இவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில தமிழகத்தில் கடந்த இரண்டரை வருடமாக காரணம் கொரோனா வைரஸ் அதிகரித்து வந்ததன் காரணம் பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்தது. அதை தொடர்ந்து சினிமா துறை தற்போது அனைத்து படங்களையும் ஓடிடி வெளியிட்டு வருகிறது. இதை தொடர்ந்து அண்மையில் வெளியான சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக இருந்தது. மேலும் அந்தப் படத்திற்கு ரசிகர்கள் பெருமளவு ஆதரவு அளித்து இருந்தனர்.

அதைத் தொடர்ந்து சூரரை போற்று திரைப்படம் கொரோனா தாக்கத்திற்கு பிறகு திரையரங்குகளிலும் வெளியானது. இந்த நிலையில் சூர்யா தற்போது வாடிவாசல் என்னும் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த திரைப்படத்தில் சூரியா நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். சூர்யா நடித்து வரும் படத்தின் பெயர் எதற்கும் துணிந்தவன். மேலும் இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா, பொன்வண்ணன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் சூர்யாவுக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு என்ன தெரியுமா?? மாஸா செஞ்சுட்டாங்க!!
சன் பிக்சர்ஸ் சூர்யாவுக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு என்ன தெரியுமா?? மாஸா செஞ்சுட்டாங்க!!

மேலும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு இப்படத்தின் அடுத்த போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருந்தது. மேலும் இன்று நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை ஒட்டி சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக எதற்கும் துணிந்தவன் படத்தில் இருந்து மற்றொரு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை தற்போது சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த போஸ்டர் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சூர்யா ரசிகர்கள் பல சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

 

 

Leave a Comment