சுங்கச்சாவடியில் உங்கள் வாகனம் நின்று விட்டால் என்னவாகும் என்று தெரியுமா? வாகன ஓட்டிகள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

0
212
Do you know what happens when your vehicle gets stuck at the toll booth? Motorists must know!!
Do you know what happens when your vehicle gets stuck at the toll booth? Motorists must know!!

சுங்கச்சாவடியில் உங்கள் வாகனம் நின்று விட்டால் என்னவாகும் என்று தெரியுமா? வாகன ஓட்டிகள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என்று இரண்டு கட்டங்களாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆண்டுதோறும் சுங்கச்சாவடி கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிர்ணயித்து வருகிறது.

தொடர்ந்து சுங்கச்சாவடி கட்டணம் உயர்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.சில சமயங்களில் கைகலப்பில் ஈடுபடும் காட்சிகளையும் காண முடிகிறது.

கட்டண வசூலில் ஈடுபடும் சுங்கச்சாவடி ஊழியர்கள் வாகன ஓட்டிகளை மனதளவில் காயப்படுத்தும் நிகழ்வுகளையும் அவ்வப்போது பார்க்க முடிகிறது.இவ்வாறு இருக்க சுங்கச்சாவடியில் பயணிக்கும் பொழுது உங்கள் வாகனம் திடீரென்று பழுதாகி நின்று விட்டால் என்னவாகும் என்று தெரியுமா?

இவ்வாறு நிகழ்ந்தால் உங்கள் வாகனத்தை அப்புறப்படுத்தும் பொறுப்பை டோல் நிறுவனம் செய்யும்,அதேபோல் சுங்கச்சாவடியில் பயணிக்கும் பொழுது உங்கள் வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து விட்டால் டோல் ஏஜென்சி உங்கள் வாகனத்தை அவ்விடத்தில்’இருந்து அப்புறப்படுத்தும்.

இதனால் வாகனம் திடீரென்று பழுதானாலோ,இல்லை பெட்ரோல் தீர்ந்து போனாலோ டென்ஷன் ஆக தேவையில்லை.டோல் நிறுவனத்தின் இந்த பலனை பெற “1033” என்ற எண்ணை அழைக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் பயணிக்கும் பொழுது திடீரென்று உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் இந்த கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு வேண்டிய உதவியை பெறலாம்.

Previous articleஉங்களிடம் எத்தனை சிம் கார்டு உள்ளது? இதை செய்ய தவறினால் இத்தனை லட்சம் அபராதம் கன்பார்ம்!!
Next articlePM கிசான் பயனாளிகளுக்கு ஜாக்பாட்! இனி ரூ.6,000 இல்லைங்க.. ரூ.12,000!