உலகின் மிக குறைவான விமான பயண நேரம் எது தெரியுமா?? தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By CineDesk

உலகின் மிக குறைவான விமான பயண நேரம் எது தெரியுமா?? தெரிந்து கொள்ளுங்கள்!!

பொதுவாக நாம் விமானங்களில் பயணிக்க காரணம் மிக தொலைவில் இருக்கும் இடங்களுக்கு மிக குறைவான நேரத்தில் பயணிக்க தான் இது நம் அனைவருக்கும் அறிந்த விடயம்தான். ஆனால் உலகிலேயே மிக குறைந்த விமான பயண நேரம் எது தெரியுமா?

இந்த உலகிலேயே மிக குறைந்த மேலும் அதிக உபயோகத்தில் இருக்கும் விமானத்தின் பயண நேரம் எவ்வளவு நேரம் என்றால் அது ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் தான். அதாவது 57 வினாடிகள் தான். மேலும் இந்த விமானம் ஸ்காட்லாந்தில் உள்ள இரு தீவுகளுக்கும் இடையில்  பயணிக்க தான் இந்த தீவு ஸ்காட்லாந்தில் உள்ள பாப்பா வெஸ்றை அண்ட் வெஸ்றை தீவுக்கு இடையில் செல்லும் விமானம்.

மேலும் இந்த விமான பயணத்தை அதிகம் பயணிப்பவர்கள் ஆசிரியர்கள், காவல்துறையினர், அலுவலக தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் போன்றவர்கள் தான் அளவுக்கு அதிகமாக உபயோகிக்கிறார்கள். மேலும் அந்த தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் அந்த விமானத்தை உபயோகிக்கிறார்கள். இந்த விமானம் பயணிக்கும் தூரம் 1.7 மயில் அதாவது 2.7 கிலோ மீட்டர். இந்த ஒரு விமானத்தில் 8 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். மேலும் இந்த விமான போக்குவரத்தை கிட்டத்தட்ட ஐம்பது வருடத்திற்கு மேலாக நடத்தி வருகிறார்கள்.