நடிகர் விஜய் ஆண்டனி இயக்கும் திரைப்படம் என்ன தெரியுமா!! இது தான் அவருக்கு ஃபர்ஸ்ட் டைம்!!

Photo of author

By CineDesk

நடிகர் விஜய் ஆண்டனி இயக்கும் திரைப்படம் என்ன தெரியுமா!! இது தான் அவருக்கு ஃபர்ஸ்ட் டைம்!!

CineDesk

Do you know what actor Vijay Antony's movie is? This is his first time !!

நடிகர் விஜய் ஆண்டனி இயக்கும் திரைப்படம் என்ன தெரியுமா!! இது தான் அவருக்கு ஃபர்ஸ்ட் டைம்!!

தமிழ் திரை உலகில் அண்மையில் பிரபலமான நடிகர் விஜய் ஆண்டனி. இவர் தமிழ்நாட்டின் ஒரு முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். விஜய் ஆண்டனி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாகர்கோவில் பகுதியில் பிறந்தார். இவருக்கு ஏழு வயதாக இருக்கும் பொழுது இவரது தந்தை இறந்துவிட்டார். விஜய்ஆண்டனி துவக்கத்தில் ஒலி பொறியாளராக பணி புரிந்தார். பின்னர் தன் கடின உழைப்பால் இசையமைப்பாளர் ஆனார். இவர் தனது கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் தாமே ஆடியோ பைல்ஸ் என்ற ஒலியரங்கை நிறுவினார். இதைத் தொடர்ந்து அங்கு ஒலி பொறியாளராக சோதனைகளை செய்து, தொலைக்காட்சிகளுக்கும் ஆவணப் படங்களும் சில இசை துண்டுகளை அமைத்தார்.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் தனது டிஷ்யூம் திரைப்படத்திற்காக இசையமைக்க விஜய் ஆண்டனியை அழைத்தார். ஆனால் விஜய் இசையமைத்த முதல் திரைப்படமாக சுக்ரன் திரைப்படம் முதலில் வெளிவந்தது. மேலும் இவர் கன்னட படம் புத்தி வந்தாவிற்கு இசையமைத்துள்ளார். இது தமிழ் படம் நான் அவன் இல்லை திரைப்படத்தின் மறுபதிப்பு படமாகும். இவர் 2009ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கான் கோல்டன் லயன் விருது பெற்றார். இந்த விருது சிறந்த இசைக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக தயாரித்த நாக்க முக்கா வணிக படத்திற்கு பெற்றார்.

மேலும் 2016ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது பலரால் எதிர்பார்க்கப்பட்ட பிச்சைக்காரன் 2 திரைப்படத்தைப் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி தான் இயக்க உள்ளர் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் தான் விஜய் ஆண்டனி இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார்.