ஏ ஆர் ரகுமான் அவர்கள் உடல்நல சோர்வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில சிகிச்சைகளுக்கு பின் தற்பொழுது வீடு திரும்பியிருக்கிறார். இவர் மருத்துவமனைக்கு சென்றது குறித்து வலைதளங்களில் மற்றும் சமூக ஊடகங்களில் இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் அதற்கான சிகிச்சைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரவின.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து ஏ ஆர் ரகுமான் வீடு தரக்கூடியதை ஏஆர் ரஹ்மான் அவர்களுடைய மகன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய தந்தைக்கு நீர் சத்து குறைபாடு இருந்ததால் அவர் சோர்வாக இருந்ததாகவும் அதனால் மருத்துவமனைக்கு சென்று வழக்கமான பரிசோதனைகளையே மேற்கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், ஏ ஆர் ரகுமான் அவர்களின் உடைய ரசிகர்கள் மற்றும் நலம் விரும்புகிறவர்களுக்ககும் நன்றி என்றும் பதிவிட்டதோடு உங்களுடைய பிரார்த்தனைகளால் தான் என்னுடைய தந்தை தற்பொழுது குணமாகி வீட்டிற்கு வந்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். உங்களுடைய ஆசிர்வாதங்களால் என்னுடைய தந்தை வீட்டிற்கு நல்லபடியாக திரும்பிவிட்டார் என்று அதற்காக உங்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம் என்றும் பதிவிட்டு இருக்கிறார்.
ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு உடல்நிலை முடியாமல் போனதை அறிந்த ரசிகர்கள் அவரது உடல் சீக்கிரமாக சரியாக வேண்டும் என்று அவர் நல்லபடியாக இருக்க வேண்டும் என்றும் தங்களுடைய ஆசிர்வாதங்களையும் வேண்டுதல்களையும் வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர். இது போன்ற அன்பிற்கு ஏ ஆர் ரகுமான் அவர்களின் மகன் அமீன் அவர்கள் நன்றி தெரிவித்து தற்பொழுது பதிவிட்டு இருக்கிறார்.