தண்ணீரை எப்போதெல்லாம் குடிக்கக் கூடாது என்று தெரியுமா? 

Photo of author

By Sakthi

தண்ணீரை எப்போதெல்லாம் குடிக்கக் கூடாது என்று தெரியுமா?
நம் உடலுக்கு ஆற்றலை அளிக்கக் கூடிய உணவுகளில் தண்ணீர் அத்தியாவசியமாக இருக்கின்றது. ஒரு நாளுக்கு அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அனைவரும் கூறுகின்றனர். தண்ணீர் குடிப்பதால் நம் உடலுக்கு நன்மைகள் இருக்கின்றது. அதே போல தீமைகளும் இருக்கின்றது.
அதாவது நாம் தண்ணீரை குடிப்பது சரிதான் என்றாலும் அதை எப்பொழுது எல்லாம் குடிக்கின்றோம் எந்தெந்த வேலைகளை செய்து முடித்து விட்டு குடிக்கின்றோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சாதாரணமாக தாகம் எடுக்கும் பொழுது தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவே எல்லா சமயங்களிலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.
அவ்வாறு எல்லா சமயங்களிலும் தண்ணீர் குடித்தால் நமக்கு பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே எப்பொழுது எல்லாம் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த பதிவில் தற்பொழுது எப்பொழுதெல்லாம் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது குறித்து பார்க்கலாம்.
எப்பொழுத எல்லாம் தண்ணீர் குடிக்கக் கூடாது…
* நாம் உணவு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. வேண்டுமானால் உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னரும் உணவு உண்டபின்  அரை மணி நேரத்திற்கு பின்னரும் தண்ணீர் குடிக்கலாம்.
* குளித்து விட்டு வந்து உடனேயே தண்ணீர் குடிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் உடலில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவு அதிகமாகும். இது நம்மை நோய்வாய்ப்படுத்தலாம்.
* நீர்ச்சத்து நிறைந்த பழங்களான வெள்ளரி, தர்பூசணி, முலாம்பழம் போன்ற பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது. இது செரிமானம் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்தும்.
* காபி, டீ போன்ற சூடான பானங்கள் குடித்துவிட்டு உடனே தண்ணீர் குடிக்க கூடாது. இவ்வாறு செய்யும் பொழுது பற்கள், ஈறுகளில் பிரச்சனை ஏற்படுத்தும்.
* வெயிலில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. இது உடலின் வெப்பநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
* இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பாக அதிகமாக தண்ணீர் குடிக்கக் கூடாது. தூங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் வேண்டுமானால் தண்ணீர் குடித்துக் கொள்ளலாம்.
* உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் தண்ணீர் குடிப்பதை நிறுத்திக் கெள்ள வேண்டும்.