பாதியில் நின்ற ஐபிஎல் எங்கே நடக்க இருக்கிறது தெரியுமா?

Photo of author

By Sakthi

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் வேகமாக பரவத் தொடங்கியது. அந்த சமயத்தில் பயோ பிபிளில் இருந்த வீரர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக பிசிசிஐ ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

இந்த சூழ்நிலையில் மீதம் இருக்கின்றன 31 போட்டிகளை துபாய் சார்ஜா அபுதாபியில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அந்த நாட்டு அரசுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

25 தினங்களில் ஐபிஎல் 2021 தொடரின் மீதம் இருக்கின்ற போட்டிகளை நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதேபோல வெளிநாட்டு வீரர்கள் மீதம் இருக்கின்ற ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்கு உரிய பேச்சுவார்த்தைகளிலும் பிசிசிஐ ஈடுபட்டிருப்பதாக தெரிகின்றது.

அவ்வாறு அவர்களால் வர இயலவில்லை என்றால் மாற்று ஏற்பாடுகளுக்கு யோசனை செய்ய வேண்டும் என்ற பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். பிசிசிஐ அதிகாரிகள் அயல் நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் உடன் பேசி இதற்கு ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.