சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை

0
75

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதோடு ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகின்றது. இதனால் பல மாவட்டங்களில் நீர்நிலைகள் நிறைந்து இருக்கின்றது. பருவ மழை பொய்த்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதன்படி சென்னையில் இன்று பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது என சொல்லப்படுகிறது. நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கோயம்பேடு, வடபழனி போன்ற இடங்களில் மழை பெய்து வருகின்றது. கோடம்பாக்கம், டி நகர், நசரத்பேட்டை, மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி, போன்ற இடங்களில் கன மழை பெய்து வருவதாக சொல்லப்படுகிறது.