நான் யார் தெரியுமா எஸ்.ஐ.மனைவி! தலைவிரித்து ஆடும் போலீஸ் அராஜகம்!

0
213
Do you know who I am SI wife! Police anarchy is rampant!
Do you know who I am SI wife! Police anarchy is rampant!

நான் யார் தெரியுமா எஸ்.ஐ.மனைவி! தலைவிரித்து ஆடும் போலீஸ் அராஜகம்!

திருவண்ணாமலை மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.அங்கு அமைந்துள்ள தேரடி வீதியில் தினந்தோறும் லட்சகணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.அந்தவகையில் தினந்தோறும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது சகஜமான ஒன்றாகும்.இன்று போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருக்கும் போது ஆட்டோ ஒன்று நாடு ரோட்டில் நின்றது.அதற்கு பணியில் இருந்த போக்குவரத்து பெண் காவலர் ஆட்டோவை ஓரமாக நிறுத்தும்படி முதலில் பணிவுடன் கேட்டுள்ளார்.

அதற்கு ஆட்டோவில் இருந்து இரங்கி வந்த பெண்களில் ஒருவர் சினிமா பட பாணியில் “நான் யார் தெரியுமா” என்று அந்த பணியில் இருந்த பெண் காவலரிடம் மிரட்டியுள்ளார்.நான் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. மனோகரனின் மனைவி என போலீஸ் அதிகாரத்துடன் கூறியுள்ளார்.இதைகேட்ட அந்த பெண் போலீசார் தனியாக சாமதானம் பேச அழைத்து சென்ற போது அந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ மனைவி பளார் என்று போக்குவரத்து பெண் போலீசார் முதுகின் மீது அடிக்க தொடங்கினார்.

அவர் அடித்ததும் அதிகம் கோவமுற்ற பெண் போலீசார் திரும்ப எஸ்.ஐ.மனைவி மற்றும் அவருடன் இருந்த இதர காவல் பணியாளர்களின் மனைவியையும்  தாக்கினார்.அந்த பெண் போலீசார் பெரியவர்கள் என்று சிறிதும் பார்காமல் தரதரவென குற்றவாளிகளை அழைத்து செல்வது போல அவர்களை இழுத்து சென்றார்.அதன்பின் அந்த பெண் போலீசார் மீது ஓய்வு பெற்ற காவல் அதிகாரியின் மனைவி வழக்கு தொடுத்துள்ளார்.தானாகவே சென்று அரசு மருத்துவமனையில் சேர்ந்து கொண்டார்.

இருவரும் செய்தது தவறு என்பது அறியாமல் பொது இடத்தில் இவ்வாறு நடந்துக்கொண்டது மக்களிடயே தவறான கருத்தை கொண்டு சேர்க்கும். போலீஸ் அதிகாரத்தை இருவருமே தவறாக பயன்படுத்துகின்றனர் என்பதை படம் போட்டு காட்டுவது போல் செய்துவிட்டார்கள் .

Previous articleதிமுக முன் பணிந்த முக்கிய கட்சி! கொந்தளித்த தொண்டர்கள்!
Next articleமுதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த்! வேட்புமனு தாக்கல்!