பிக் பாஸ் சீசன் 5ல் யார் கலந்து கொள்ள போறாங்க தெரியுமா!! இதுவரை யாருமே எதிர்பாராத ஒருவர் தான்!!

Photo of author

By CineDesk

பிக் பாஸ் சீசன் 5ல் யார் கலந்து கொள்ள போறாங்க தெரியுமா!! இதுவரை யாருமே எதிர்பாராத ஒருவர் தான்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. மேலும் இந்த நிகழ்ச்சி கடந்த நான்கு வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி 2017 ஆம் ஆண்டு முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உண்மை நிகழ்ச்சி ஆகும். இது நெதர்லாந்து நாட்டில் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியில் வடிவத்தை பின்பற்றுகிறது. இதுவரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நான்கு பருவங்களிலும் பிரபல நடிகர் மக்கள் நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். இதன் மூலம் அவர் மக்கள் மத்தியில் நல்ல விதமான விமர்சனங்களை பெற்று வாழ்ந்தனர். கடந்த நான்காவது பருவத்தை ஜூன் மாதமே தொடங்க வேண்டி இருந்தது. ஆனால் கோவிட்-19 பெறும் தொற்றுநோய் காரணமாக சிறிது தாமதமாகி அக்டோபர் மாதம் ஒளிபரப்பானது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீசனுக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கும். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்பதும் 16 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் தங்க வேண்டும். மேலும் பிக் பாஸ் கூறும் அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும் மற்றும் பிக் பாஸ் கொடுக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதை தொடர்ந்து 100 நாட்களில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்படுவார். இறுதியாக நூறாவது நான் எவரொருவர் இந்த வீட்டில் உள்ளாரோ அவர் தான் இந்த போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பிக் பாஸ் கோப்பையையும் வென்று செல்வார். மேலும் இதனால் திரையுலகிற்கு அறிமுகமாகாத பல பிரபலங்கள் கூட மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுவர். அவர்களுக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகளும் தேடி வரும் நிகழ்ச்சியாக அமைகிறது.

 

இந்த நிலையில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 5 விரைவில் ஆரம்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேளையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் லோகோ டிசைன் அண்மையில் வடிவமைக்கப் பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பிக் பாஸ் சீசன் 5 பற்றிய ஒரு ப்ரோமோ வெளியாக உள்ளது எனவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து பிக் பாஸில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யார் என்பதை விரைவில் சமூக வலைதளங்களில் வெளியிட போவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பிக்பாஸ் ஐந்தில் போட்டியிடும் போட்டியாளர்களை சிலர் யார் யார் என்பது நமக்கு தெரிந்ததுதான். அதை தொடர்ந்து தற்பொழுது நடிகையும் குக் வித் கோமாளி பிரபலமான ஷகிலா அவர்களின் மகளான மிலா பிக் பாஸ் 5 நிகழ்ச்சி கலந்து கொள்ள போவதாக உறுதியாக கூறுகின்றனர். ஆனால் எந்த ஒரு செய்தியும் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும் பிக் பாஸ் 5 பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.