இவர்களுக்கு மட்டும் பாகிஸ்தானில் இருந்து ஆதரவு வருவது ஏன் தெரியுமா? பிரதமர் நரேந்திர மோடி பகீர் பேட்டி!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கும் பாகிஸ்தானில் இருந்து ஆதரவு வருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியுள்ளார்.
அண்மையில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹுசைன் அவர்கள் அவருடைய எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி அவர்களின் வீடியோவை பகிர்ந்து அவரை பாராட்டி பதிவிட்டிருந்தார். அதே போல முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்ததற்கும் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹுசைன் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இது குறித்து பேசியுள்ளார்.
அந்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “பாஜக கட்சியை எதிர்ப்பவர்கள் மட்டும் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சருக்கு எப்படி பிடிக்கின்றது. பாஜக கட்சியை எதிர்ப்பவர்களுக்கு மட்டும் எப்படி அவர்களின் ஆதரவு கிடைக்கின்றது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம் ஆகும்.
இருந்தாலும் இந்தியாவில் வாக்களிக்க தகுதியுடைய அனைத்து வாக்காளர்களும் அரசியல் பற்றிய தெளிவு உடைய வாக்காளர்கள் ஆவர். அவ்வாறு அரசியல் தெளிவு பெற்ற வாக்காளர்களுக்கு மத்தியில் வெளிநாட்டில் இருப்பவர்கள் வெளியிடும் அறிக்கைகள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இந்தியாவில் நடத்தப்படும் தேர்தல் முதிர்ச்சியடைந்தது போலவே இந்தியாவின் ஜனநாயகமே முதிர்ச்சி அடைந்துள்ளது. இந்திய ஜனநாயகம் போலவே அதன் வாக்காளர்களும் இருக்கிறார்கள். எனவே இவர்களை வெளிப்புறக் காரணங்கள் எந்தவிதத்திலும் பாதிக்காது” என்று கூறியுள்ளார்.