கண்களில் இருந்து வழியும் கண்ணீர் ஏன் உப்பு சுவை கொண்டுள்ளது தெரியுமா?

Photo of author

By Divya

கண்களில் இருந்து வழியும் கண்ணீர் ஏன் உப்பு சுவை கொண்டுள்ளது தெரியுமா?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சோகம் மற்றும் மகிழ்ச்சியை பிறருக்கு கண்ணீர் மூலம் வெளிப்படுத்துகின்றோம்.நம் உணர்வுகளோடு கலந்து இந்த கண்ணீர்.எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சு கொண்ட மனிதனையும் கண்ணீர் துளிகள் கரைத்து விடும்.

நம் மனதில் உள்ள உணர்வுகள் கண்ணீர் சுரப்பிகளால் தூண்டப்பட்டு அவை கண்ணீரை வெளிப்படுத்துகிறது.சிலருக்கு கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடும்.அடிக்கடி கண்ணீர் விடுவதால் கண்கள் வறட்சியடையாமல் இருக்கும்.அது மட்டுமின்றி அடிக்கடி கண்ணீர் விடுவதால் மன அழுத்தம் குறையும் என்கிறது ஆய்வு முடிவுகள்.

ஒருவரது கண்களில் இருந்து அதிகளவு கண்ணீர் வடிந்தாலும் அவை கண்களில் பாதிப்பபு ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் ஆகும்.காரணமின்றி கண்களில் நீர் வடிந்தால் உடனே மருத்துவர்களை அணுகுவது நல்லது.

பிறந்த நாள் முதல் விவரம் தெரிந்த நாள் வரை நாம் எத்தனை முறை அழுத்திருப்போம்.சுப,துக்கம் என்று அனைத்து விஷயங்களுக்காகவும் நம் கண்களில் இருந்து வழித்தோடும் கண்ணீர் ஏன் உப்பு சுவையில் இருக்கிறது என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

நம் கண்களில் இருந்து வெளியேறும் கண்ணீர் உப்பு சுவையில் இருக்க காரணம்:

நம் உடலில் அதிகளவு சோடியம் குளோரைடு இருக்கிறது.செல்கள்,உடல் எலும்புகள்,இரத்தம் உள்ளிட்ட பல பகுதியில் சோடியம் உள்ளது.இவை இதயம்,நரம்புகள் வேலை செய்வதற்கும் தசைகள் சுருங்கி விரிவடைவதற்கும் சோடியம் உதவுகிறது.அதேபோல் குளோரைடானது நாம் சாப்பிடக் கூடிய உணவுகளின் உள்ள கிருமிகளை அழிக்க உதவுகிறது.இந்த சோடியம் குளோரைடு உடலில் அதிகளவு இருப்பதினால் தான் வெளியேறும் கண்ணீர்,வியர்வை,இரத்தம் அனைத்தும் உப்பு சுவையில் இருக்கிறது.