வழியில் பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம் என்று ஏன் சொல்றாங்கனு தெரியுமா?

Photo of author

By Divya

வழியில் பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம் என்று ஏன் சொல்றாங்கனு தெரியுமா?

Divya

இன்றைய நவீன உலகில் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் இந்தியாவில் மட்டும் மூட நம்பிக்கைகளில் மீதான நம்பகத் தன்மை குறைந்தபாடில்லை.நம் மக்கள் மூட நம்பிக்கைகளில் மூழ்கி அனைத்திலும் சகுனம் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

சுப நிகழ்வுகளுக்கு செல்லும் போது சகுனம் பார்ப்பதை பலரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.சுப நிகழ்வில் கெட்ட சகுனம் ஏற்பட்டால் அதை நிறுத்திவிடவும் சிலர் தயங்க மாட்டார்கள்.எந்த ஒரு காரியத்திற்கு செல்லும் முன் பூனை குறுக்கே போனால் அது கெட்ட சகுனம் என்று செல்லும் வேலையை நிறுத்தவிடுகின்றனர்.

சிலர் பூனை குறுக்கே போனால் உடனே வீட்டிற்கு வந்து தண்ணீர் குடித்து சிறிது நேரம் ஓய்வெடுத்தவிட்டு தான் செல்வார்கள்.பூனை குறுக்கே சென்ற காரியம் உருப்படாது என்று சிலர் சொல்கின்றனர்.இதற்கு பின்னால் இருக்கும் உண்மை காரணம் அறிந்தால் நிச்சயம் உங்கள் மூட நம்பிக்கை உடைந்து போகும்.

முந்திய காலத்தில் இரவில் மாட்டு வண்டி,குதிரை வண்டியில் தான் மக்கள் பயணம் மேற்கொண்டனர்.இரவில் குதிரை,மாட்டு வண்டியில் பயணம் மேற்கொள்ளும் பொழுது எதிரில் வரும் பூனை அதன் கண்களுக்கு தெரியாது.பூனைகள் கண்கள் இருட்டில் மட்டும் லைட் போட்டது போன்று தெரியும் என்பதால் மாடு,குதிரை பயந்து மிரண்டுவிடும்.பூனை மட்டுமின்றி புலி,சிறுத்தை,சிங்கம் போன்ற விலங்குகளுக்கும் இரவில் கண்கள் லைட் போட்டது போன்று மின்னும்.இதனால் எதிரில் வருவது பூனையா இல்லை புலி,சிங்கமா என்பதில் குழப்பம் ஏற்பட்டு அச்சத்தில் மிரளும்.இது நடக்காமல் இருக்க வண்டிக்காரர் சிறிது நேரம் குதிரை,மாடு ஆகியவற்றிற்கு தண்ணீர் குடித்து ஓய்வெடுக்க வைப்பார்கள்.

இந்த நிகழ்வுதான் காலப்போக்கில் பூனை குறுக்கே போனால் தண்ணீர் குடிக்க வேண்டும்.சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு வேலையை தொடங்க வேண்டுமென்று மாறிவிட்டது.எனவே இனி பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம் பார்ப்பதை தவிருங்கள்.