உங்கள் வீட்டு பாத்ரூமில் அடிக்கடி பூரான் வந்துவிடுகிறதா!! உடனே இதை செய்யுங்கள் தொல்லையே இருக்காது!!

Photo of author

By Divya

வீட்டு கழிவறை,குளியல் அறை சுத்தமாக இருந்தால் மட்டுமே நோய் பாதிப்புகள் நம்மை அண்டாது.குளியலறை,கழிவறை சிங்க்கில் இருந்து கரப்பான் பூச்சி,கொசு,பூரான்,பூச்சிகள் போன்றவை வருவதால் லிக்விட்,பவுடர் போன்றவற்றை பயன்படுத்தியும் ஒரு பிரியோஜனமும் இருப்பதில்லை.

மழைக்காலங்களில் பாத்ரூமில் பூரான்,விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் அதை கட்டுப்படுத்த என்ன செய்வதென்று தெரியாமல் பலரும் திணறுகின்றனர்.

பாத்ரூமில் எப்பொழுதும் ஈரம் இருந்து கொண்டே இருப்பதால் பூரான்,பாம்பு,விஷப் பூச்சிகளின் வருகை அதிகரிக்கிறது.இதனால் வாரத்திற்கு ஒருமுறை பாத்ரூமை அவசியம் சுத்தம் செய்ய வேண்டும்.

பாத்ரூமில் காணப்படும் கிருமிகள்,பாக்டீரியாக்களை சுத்தம் செய்யவில்லை என்றால் நோய் வாய்ப்படல் அதிகரிக்கும்.

பாத்ரூமில் விஷ ஜந்துக்களின் வருகையை தடுப்பது எப்படி?

ப்ளீச்சிங் பவுடரை வைத்து பாத்ரூமை சுத்தம் செய்து வந்தால் அழுக்கு நீங்குவதோடு தரை சீக்கிரம் காயத் தொடங்கும்.இதனால் ஈரத்திற்கு வரும் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் கட்டுப்படும்.

வினிகர் மற்றும் டெட்டால் சம அளவு எடுத்து ஒரு பாக்கெட் நீரில் கலந்து கொள்ளவும்.பிறகு இதை பாத்ரூம் முழுவதும் ஊற்றி 30 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.அதன் பிறகு ஒரு பிரஷ் பயன்படுத்தி சுத்தம் செய்தால் அழுக்கு,கிருமிகள் ஒழியும்.பூரான்,கரப்பான் பூச்சி போன்றவற்றின் தொல்லை இல்லாமல் இருக்கும்.

பாத்ரூமில் அதிகப்படியான அழுக்குகள் மற்றும் கறைகள் இருந்தால் உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை பரப்பி விடவும்.பிறகு வெது வெதுப்பான நீர் பயன்படுத்தி பாத்ரூமை சுத்தம் செய்யவும்.இதனால் அழுக்கு,கறைகள் நீங்குவதோடு விஷப் பூச்சிகளின் நடமாட்டம் கட்டுப்படும்.பாத்ரூம் முழுவதும் உப்பை தூவி விட்டால் பூரான் வருகை கட்டுப்படும்.