இன்று மொபைல்,லேப்டாப்,கணினி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.பெரும்பாலானோர் லேப்டாப்பில் தான் அலுவலகம் சார்ந்த வேலைகளை செய்து வருகின்றனர்.இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கண் பார்வை குறைபாடு ஏற்படக் கூடும்.
அதிக நேரம் டிஜிட்டல் திரைகளை பார்க்கும் போது கண் குறைபாடு ஏற்படும்.நீங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் நீண்ட நேரம் டிஜிட்டல் திரையை பார்த்தீர்கள் என்றால் அது கண்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமின்றி தொடர்ந்து மின்னணு சாதனங்களை பார்ப்பதால் தலைவலி,கண் வறட்சி,கண் எரிச்சல்,மங்கலான கண் பார்வை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
நீங்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து டிஜிட்டல் திரையை பார்ப்பதால் நாளடைவில் முதுகு வலி,கழுத்து வலி போன்றவை அதிகமாகும்.நீண்ட நேரம் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதால் கண் குறைபாடுகள்,கண் சூடு போன்றவை எற்படக் கூடும்.இந்த பாதிப்புகளை நீங்கள் கவனிக்க தவறினால் விரைவில் கண் பார்வையை இழக்க நேரிடும்.இன்று பெரும்பாலானோர் கண் குறைபாட்டை சந்திக்க முக்கிய காரணம் மின்னணு சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துதல் தான்.
எனவே 30 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்னணு சாதனங்களில் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது.இதனால் கண்களுக்கு தேவையான ஓய்வு கிடைக்கும்.அது மட்டுமின்றி லேப்டாப்,மொபைல் போன்ற பொருட்களை கண்களுக்கு அருகில் வைத்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுதல் தண்ணீர் குடித்தால் போன்ற செயல்கள் மூலம் கண்களில் வறட்சி ஏற்படுவதை தவிர்க்க முடியும்.