நான் சிங்கிளாக இருப்பேன் என நினைக்கிறீர்களா..விஜய் தேவர்கொண்டா ஓபன் டாக்!!

0
108
Do you think I will be single..Vijay Devarakonda Open Talk!!
Do you think I will be single..Vijay Devarakonda Open Talk!!

சினிமா: விஜய் தேவர்கொண்டா தனது காதல் வாழ்க்கை பற்றி அண்மையில் நடந்த ஒரு ஷோவில் மனம் திறந்து பேசியுள்ளார்.

விஜய் தேவர்கொண்டா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் முதன் முதலில் தமிழில் நோட்டா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். விஜய் தேவர்கொண்டா நடித்த லைகர், தி பேமிலி ஸ்டார் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இவர் சஹிபா என்ற இந்தி ஆல்பம் பாடலில் நடித்திருந்தார்.

அந்த ப்ரோமோஷன் ஈவண்டில் தான் இவர் தனது காதல் வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அந்த ஈவண்டில் அவர் ரசிகர்களிடம் எனக்கு 35 வயது ஆகிறது, நான் சிங்கிளாக இருப்பேன் என நினைக்கிறீர்களா என காமெடியாக கூறினார். மேலும் அவர் என்னுடைய காதலில் அன்கண்டிஷனலான காதல் கிடையாது, சில கண்டிஷன்கள் வரும் என கூறினார். அவர், நான் என்னுடன் நடித்த சக நடிகைகளுடன் டேட் செய்துள்ளேன் என உண்மையை தானே ஒப்பு கொண்டார்.

இந்த நிலையில் விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலிக்கிறார்கள். மேலும் அவர்கள் ஒன்றாக டேட் செய்து வருவதாக டியர் காமரேட் திரைப்படம் வெளியான நாட்களில் இருந்து அரசல் புரசலாக பேசப்படுகிறது. ஆனால் அது எவ்வளவு உண்மை என தெரியவில்லை. மேலும் விஜய் தேவர்கொண்டா வேறொரு பேட்டியில் நான் பெண்களை மதிக்கிறேன். பெண்கள் மீது அதிகாரம் செலுத்த கூடாது என அதில் தெரிவித்துள்ளார்.

Previous articleதமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
Next article17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை!! இந்திய அரசு அதிரடி நடவடிக்கை !!