தற்பொழுது இரசாயனப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பெண்கள் இடையே அதிகரித்து வரும் வருகிறது.இதனால் பெண்கள் தங்கள் முகத்தை இயற்கையான முறையில் பராமரிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடலை மாவு பேஸ் பேக்,கற்றாழை பேக் என்று வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சரும அழகை பராமரிக்க முடியும் என்று பெண்கள் நம்புகின்றனர்.ஆனால் நாம் செய்யும் சில தவறுகளால் இயற்கையான முறையில் தயாரிக்கும் பேஸ் பேக்குகளும் சரும பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.
கடலை மாவு பேக் சருமத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை போக்கி பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.ஆனால் கடலை மாவில் சோடா உப்பு சேர்த்து சருமத்திற்கு பயன்படுத்தினால் சரும வறட்சி,அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
கடலை ,மாவில் எலுமிச்சை சாறு சேர்த்து சருமத்திற்கு பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் அதை தவிர்க்கவும்.எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் தோல் எரிச்சல்,அரிப்பு போன்ற சரும பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.
கடலை மாவில் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து சருமத்திற்கு அப்ளை செய்யும் பழக்கம் பலரிடம் இருக்கிறது.இது சரும ஆரோக்கியத்தை முற்றிலும் பாதித்துவிடும்.அதேபோல் கடலை மாவில் வினிகர் சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தும் பழக்கத்தை கைவிடவும்.
கடலை மாவில் கல் உப்பு சேர்த்து முகத்திற்கு அப்ளை செய்தால் சரும எரிச்சல்,வறட்சி உண்டாகிவிடும்.எனவே கடலை மாவில் இதுபோன்ற பொருட்களை சேர்ப்பதை தவிர்த்து தயிர்,தேன்,மஞ்சள் போன்ற பொருட்களை கலந்து சருமத்திற்கு பயன்படுத்துங்கள்.