சூரிய வெளிச்சத்தில் இருந்து சரும ஆரோக்கியத்தை காக்க சன்ஸ்க்ரீன் பயன்படுத்தப்படுகிறது.இது ஒரு தோல் பராமரிப்பு பொருளாகும்.சன்ஸ்க்ரீன் பயன்படுத்தினால் தோல் புற்றுநோய் பாதிப்பு வராமல் இருக்கும்.சூரிய ஒளி சருமத்தில் படாமல் இருக்க சருமம் சேதமாகாமல் இருக்க சன்ஸ்க்ரீன் உதவுகிறது.
சன்ஸ்க்ரீன் பயன்படுத்தினால் தோல் சேதமாவது குறையும்.மற்ற க்ரீம்களை பயன்படுத்துவதைவிட சன்ஸ்க்ரீன் பயன்படுத்தினால் சரும ஆரோக்கியம் மேம்படும்.கோடை காலத்தில் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
இந்த வெயில் காலத்தில் வெளியில் சென்றால் நம் தோல் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டுவிடும்.அதிக வெயிலால் தோல் அலர்ஜி பிரச்சனை வரலாம்.இதன் காரணாமாகத் தான் சன்ஸ்கீரின் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றோம்.
எல்லா சன்ஸ்க்ரீனும் நமது சருமத்திற்கு ஒத்துக் கொள்ளாது.கோடை காலத்தில் SPF 30 என்ற சன்ஸ்க்ரீன் பயன்படுத்தினால் சருமத்தில் சூரிய ஒளிக் கதிர்கள் அண்டாமல் இருக்கும்.இது தவிர SPF 15 மற்றும் SPF 50 போன்ற சன்ஸ்க்ரீன் இருக்கிறது.
சன்ஸ்க்ரீன் வாங்கும் போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
1)நீங்கள் எந்த சன்ஸ்க்ரீன் வாங்கினாலும் அதன் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை கவனிக்க வேண்டும்.
2)உங்கள் சன்ஸ்க்ரீனில் SPF PA அருகில் மூன்று + சிம்புள் இருக்கின்றதா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.
3)உங்கள் சருமத்திற்கு தகுந்த சன்ஸ்க்ரீனை வாங்கி பயன்படுத்த வேண்டும்.சரும வகைக்கு ஏற்றவாறு ஜெல்,லோஷன்,க்ரீம் வடிவில் சன்ஸ்க்ரீன் கிடைக்கிறது.
நீங்கள் வெளியில் செல்வதற்கு ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பாக இந்த சன்ஸ்க்ரீனை சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும்.அதேபோல் தினமும் அளவாக சன்ஸ்க்ரீனை பயன்படுத்த வேண்டும்.உடலில் வியர்வை இருந்தால் துடைத்துவிட்டு சன்ஸ்க்ரீனை பயன்படுத்துங்கள்.