உனக்கு டிரான்ஸ்பர் வேணும்னா உன் பொண்டாட்டிய ஒரு நைட் அனுப்பு! மேலாதிகாரியின் கீழ்தர செயல்! 

0
167
Do you want a transfer? Send your Pontatie a Night! Inferior people give birth to inferior offspring and, thus, propagate their inferiority.
Do you want a transfer? Send your Pontatie a Night! Inferior people give birth to inferior offspring and, thus, propagate their inferiority.

உனக்கு டிரான்ஸ்பர் வேணும்னா உன் பொண்டாட்டிய ஒரு நைட் அனுப்பு! மேலாதிகாரியின் கீழ்தர செயல்!

மேலதிகாரிகள் தங்களின் பதவியை பயன்படுத்தி தன்னிடம் கோரிக்கையை வைப்பவரிடம் தகாத முறையில் நடந்துகொள்கின்றனர். தற்பொழுது மிகவும் கீழ்த்தரமான சம்பவம் ஒன்று உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூர் என்ற மாவட்டத்தில் மின்நிலையத்தின் லைன் மேன் ஆக பணிபுரிந்து வருபவர் தான் கோகுல். இவர் வெகுநாட்களாக பல்லியாவு என்ற பகுதியில் லைன் மேன் ஆக பணியாற்றி வந்தார். சமீபத்தில் அலிகஞ்சு என்ற பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள பகுதியில் இவர் வசிக்கும் இடத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் தனது மேலதிகாரி நாகேந்திரா சர்மா என்பவரிடம் பழைய இடத்திற்கு மாற்றம் செய்து தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அந்த மேலதிகாரி ரூ ஒரு லட்சத்தை லஞ்சமாக கேட்டுள்ளார். அத்தோடு அந்த லைன் மேன் மனைவியை ஒரு நாள் இரவு முழுவதும் தன்னுடன் அனுப்பி வைக்குமாறும் கேட்டுள்ளார். இதனை தாங்க முடியாத அந்த லைன் மேன் அடுத்த நாள் அந்த மேலதிகாரியின் வீட்டின்முன் தீக்குளித்தார். பிறகு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி லைன் மேன் கோகுல் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன் இதுகுறித்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். தற்பொழுது போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவர் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த அந்த மேலதிகாரி நாகேந்திர சர்மாவை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Previous articleஉக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி நீங்கள் இந்தியாவிலேயே படிக்கலாம்!
Next articleதூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் மீன்பிடிப்பதற்கு தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு