உடலில் உள்ள அம்மை தழும்புகள் அனைத்தும் காணாமல் போக வேண்டுமா? கசகசாவைவை இப்படி பயன்படுத்தி பாருங்க! 

Photo of author

By Sakthi

உடலில் உள்ள அம்மை தழும்புகள் அனைத்தும் காணாமல் போக வேண்டுமா? கசகசாவைவை இப்படி பயன்படுத்தி பாருங்க!
நம்மில் ஒரு சிலருக்கு உடலில் அம்மை போட்ட தழும்புகள் அப்படியே இருக்கும். இதை மறையச் செய்ய நாமும் நம்மால் முடிந்தவரை பல சிகிச்சைகளை செய்திருப்போம். இருப்பினும் இந்த தழும்புகள் மறையாது.
ஆங்கில மருந்துகள் வாங்கி அம்மை தழும்புகள் மீது பூசி இருந்தாலும் அம்மை தழும்புகள் மறைந்திருக்காது. எனவே அந்த வகையான மறையாத அம்மை தழும்புகள் அனைத்தையும் மறையச் செய்ய இந்த பதிவில் இயற்கையான வழியில் ஒரு மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* கசகசா
* மஞ்சள்
* கறிவேப்பிலை
செய்முறை…
முதலில் மிக்சி ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் நாம் எடுத்து வைத்துள்ள கசகசா, மஞ்சள், கறிவேப்பிலை மூன்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதோ அம்மை தழும்பை மறைய வைக்கும் மருந்து தயார்.
இந்த மருந்தை எடுத்து உடலில் எங்கெல்லாம் அம்மைத் தழும்புகள் இருக்கின்றதோ அங்கெல்லாம் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழிந்து கழுவி விடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.