லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இந்த நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாதா?? பயனுள்ள ஆன்மீக தகவல்கள்!!

0
39

லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இந்த நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாதா?? பயனுள்ள ஆன்மீக தகவல்கள்!! 

லஷ்மி வசியம் உண்டாக வேண்டுமா?? இதோ சில ஆன்மீக பரிகாரங்கள்!!

வெள்ளிக்கிழமை இரவு 8-9 மணியளவில் ஒரு மனையில் குங்குமத்தினால் ஸ்ரீம் என எழுதி அதைச் சுற்றிலும் ஆறு மண் அகலில் சுத்தமான நெய் சேர்த்து பின்பு குங்குமத்தை நீரில் குழைத்து அதில் நனைக்கப்பட்ட தாமரை தண்டு திரியினை கொண்டு விளக்கேற்றி ஸ்ரீ மந்திரத்தை மனதினுள்ளே ஜபம் செய்து கற்கண்டு நிவேதனம் செய்யவும்.

பின்பு நிவேதனத்தை அப்படியே வைத்திருந்து மறுநாள் 9 வயதிற்குட்பட்ட ஐந்து பெண்களுக்கு அதைக் கொடுக்கவும் மீதமிருப்பதை வீட்டில் உள்ள அனைவரும் உண்ணலாம்.

தொடர்ந்து வீட்டில் உள்ள எவரேனும் இதை 21 வெள்ளிக்கிழமைகள் செய்து வர லட்சுமி கட்டு எனப்படும் சதா பணக்கஷ்ட நிலைமை அடியோடு அழிந்து நிதிநிலை மேம்படும்.

சுவாமி படங்களுக்கு நீங்கள் மஞ்சள் குங்குமம் வைக்கும் பொழுது கைகளால் தொட்டு வைக்காமல் பட்சில் தொட்டு வைக்கும் போது பொட்டு அழகாக மொட்டு போல் காட்சி அளிக்கும்.

ஆண் தெய்வங்களுக்கு தூபம் காட்டும் போது கீழிருந்து மேலாகவும் பெண் தெய்வங்களுக்கு தீபம் காட்டும் போது மேலிருந்து கீழாகவும் தூபம் காட்டுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

சிவன், பார்வதி, விநாயகர், முருகர், உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால் அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.

நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும். மேலும் அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.