DMK: மகளிர் உரிமைத் தொகையானது கிட்டத்தட்ட 2 கோடிக்கும் மேற்பட்டோர் பெற்று வருகின்றனர். இருப்பினும் திமுக ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை பலருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை. மேற்கொண்டு பெண்களின் வாக்குகளை கவர ஸ்டாலின் விடுபட்டவர்களுக்கு மகளிர் தொகை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இது ரீதியாக கடலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளையபெருமாள் உருவச் சிலையை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில் பெண்கள் பயனடையும் வகையில் மாவட்டந்தோறும் ஆயிரம் முகாம்கள் நிறுவப்பட்டு 46 சேவைகளுக்கு தீர்வு காணப்படும். அச் சமயத்தில் மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் கட்டாயம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இது ரீதியாக வீடு தோறும் விண்ணப்ப படிவம் வரும் என்றும் கூறினார். அதில் தங்களது தேவைகளை எழுதி முகாம் நடக்கும் நேரத்தில் கொடுக்க வேண்டும்.
ஸ்டாலின் கூறியது போல தற்போது அனைத்து மாவட்டங்களிலும் விண்ணப்ப படிவம் கொடுக்கும் பணியானது தீவிரமடைந்துள்ளது. பெண்கள் அந்த விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொண்டு தங்கள் உரிமைத் தொகையை வாங்கிக் கொள்ளலாம். இச்ச சமயத்தில் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் கட்டாயம் உரிமைத் தொகை கிடைப்பது சிரமம்தான் என கூறுகின்றனர். அதிலும் திமுக வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்காக இவ்வாறான ஏற்பாடை செய்துள்ளதாகவும் மாற்றுக் கட்சி அரசியல் புள்ளிகள் பேசி வருகின்றனர்.